கிரிக்கெட்: அம்பயர்கள் நியமனத்தில் புதிய முறை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)முழுநேர தொழில் முறையிலான சிறந்த அம்பயர்கள் நியமிக்கப்படுவார்கள்என அறிவித்துள்ளது.

இதன்படி டெஸ்ட் மேட்சுகளில் தற்போது பின்பற்றி வரும் முறை மாற்றியமைக்கபடுகிறது.

ஐ.சி.சி. நியமிக்கவிருக்கும் நடுவர் குழுவில் 8 நடுவர்கள் இடம் பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது. ஐ.சி.சி.நியமிக்கும் நடுவர் குழுவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் 25 நடுவர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

தற்போது உள்ள புதிய முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. நடுவர்கள்சர்வதேச அளவில் உடன்படிக்கை செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

டெஸ்ட் மேட்சுகளில் தற்போது உள்ள முறையும் மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது டெஸ்ட் மேட்சுகளின் போது1 நியூட்ரல் அம்பயரும், டெஸ்ட் போட்டி நடத்தும் நாட்டின் அம்பயர் ஒருவரும் இருப்பார்கள். இனி இரண்டுஅம்பயர்களுமே நியூட்ரல் அம்பயர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனாலும் ஒரு நாள் போட்டிகளில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. தற்போது உள்ள முறையேபின்பற்றப்படும். தற்போது ஒரு நாள் போட்டிகளில் இரண்டு அம்பயர்களுமே போட்டியை நடத்தும் நாட்டைச்சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.

சில சமயம் ஒருவர் நியூட்ரல் அம்பயராக இருப்பார். மற்றொருவர் போட்டியைை நடத்தும் நாட்டைச் சேர்ந்தஅம்பயராக இருப்பார். இதில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.

லார்ட்சில் இரண்டு நாட்கள் நடந்த ஐ.சி.சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கிரேகூறுகையில், தற்போது அமைக்கப்படவிருக்கும் நடுவர்கள் குழுவில் 8 பேரோ அல்லது அதற்குஇணையானவர்களோ நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஐ.சி.சியால் 2 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு,ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள்.

நடுவர்களை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐ.சி.சியின் தலைவர் மால் ஸ்பீட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்கமிட்டியின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் தலைவர் சுனில் காவஸ்கரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இவர்கள் இருவரும் நடுவர்களை கடந்த 4 ஆண்டுகளில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என மேட்சுரெப்ரிகளிடமிருந்தும், கிரிக்கெட் விளையாடும் நாட்டின் கேப்டன்களிடமிருந்தும் அறிக்கை பெற்றுஅதனடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள்.

நடுவர்களுக்கான சம்பளம் அவர்கள் வாழும் பொருளாதார நிலையின் அடிப்படையை கணக்கில் கொண்டுஅளிக்கப்படும். இதன்படி பார்க்கும் போது தென்ஆப்பிரிக்க நடுவருக்கு, ஆஸ்திரேலியா நடுவருக்கு கொடுப்பதுபோன்ற சம்பளம் கொடுக்கப்படமாட்டாது.

ஆனாலும் அவர்கள் வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் போது கொடுக்கப்படும் மேட்ச் பீசில் எந்த விதமானமாற்றமும் இருக்காது என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+