அரசியல் சட்டத்தில் 40 எழுத்துப் பிழைகள்!
டெல்லி:
அரசியல் சட்ட மசோதா ஒன்றில் 40 எழுத்துப்பிழைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரசாயன ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்த சட்டம் 2000 தொடர்பான மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டது.
அழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கும், அவற்றை பாதுகாத்து வைப்பதற்கும் இந்தச் சட்டம்தடை விதிக்கிறது. இந்த மசோதா சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.
இந்த மசோதாவைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதி இந்தமசோதாவில் ஒப்புதல் கையெழுத்துப் போட்டார்.
மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் மத்திய அரசு கெசட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் 28 ம் தேதிவெளியிடப்பட்டது.
எழுத்துப்பிழைகள் கண்டுபிடிப்பு:
இப்போது அந்த சட்டத்தைப் படித்துப் பார்த்த போது அதில் ஏராளமான எழுத்துப் பிழைகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தில் 40 எழுத்துப் பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் 125 வது பக்கத்தில்person என்று இருக்க வேண்டிய இடத்தில் perones என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதே பக்கத்தில் மேலும் இரண்டு எழுத்துப் பிழைகள் உள்ளன. அதே போல் 92 வது பக்கம் தொடங்கி பலபக்கங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன.
இந்திய அரசியல் சட்ட விதிமுறைப்படி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களில், கமாமுதல் முற்றுப்புள்ளி வரை தவறுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால் ரசாயன ஆயுதங்கள் தொடர்பான இந்த சட்டத்தில் இவ்வளவு பிழைகள் இருப்பது ஆச்சர்யத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டதால் இதைத் திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப்பிழைகள் அரசுக்கு மட்டுமின்றி நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையைஏற்படுத்தியுள்ளது.
இந்த எழுத்துப் பிழைகளைத் திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு திருத்த சட்டம் ஒருதிருத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நம்பப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications