அசாமில் சரணடைந்த 14 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் போலீஸாரிடம் சரணடைந்த 14 தீவிரவாதிகளை, உல்பாதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 5 தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அசாம் மாநில காவல்துறை அமைச்சர் பிரதியுத் போர்டோலி கூறுகையில், அசாமில் உல்பாதீவிரவாதிகள் பலர் சமீபத்தில் போலீசில் சரணடைந்தனர்.
சரணடைந்த தீவிரவாதிகளில் 14 பேரை மோரான் பகுதியிலுள்ள மோரான் போலோ கிளப்பில் பிற தீவிரவாதிகள்சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு நடந்தது. பயங்கர ஆயுதங்களுடன் இரண்டுகார்களில் வந்திறங்கிய தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரணடைந்த 14 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் மேலும் 5 தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.
தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை நடத்தி விட்டு அப்பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர். இதையடுத்துதாக்குதல் நடந்த இடத்தில் போலீஸ், ராணுவம் மற்றும் புறக்காவல் படை வீரர்கள் தீவிரவாதிகளைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய சாலைப்பகுதிகளில் போலீஸார் ரோந்துப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் சரணடைந்த பிற தீவிரவாதிகள், தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய அரசிடம் உதவிகோரியுள்ளனர் என்றார்.
சரணடைந்த தீவிரவாதிகளை கொல்லும் உல்பா தீவிரவாதிகளின் செயல்கள் மிகவும் கீழ்த்தரமானவை என்றும்கண்டிக்கத்தக்கவை என்றும் சரணடைந்த தீவிரவாதி சுனில் நாத் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் சரணடைந்த தீவிரவாதிகளில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை உல்பாதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 5 வருடங்களில் 5,000 க்கும் அதிகமான உல்பா தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில்10, 000 பேர் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.
1979 ம் ஆண்டு உல்பா தீவிரவாதிகளின் அமைப்பு உருவாக்கப்பட்டது. உல்பா தீவிரவாதிகள் அசாமில் தனிமாநிலம் கேட்டு போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications