முஷாரப்புக்கு நாராயணன் வாழ்த்து
டெல்லி:
ஜூலை மாதம் பாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரப் இந்தியாவுக்கு வருகை தருவதால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்இடையே உள்ள உறவு மேம்படும் என்று இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பதவியேற்றுக் கொண்டதற்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியா எப்போதும் பாகிஸ்தானுடன் நட்புறவையும், அமைதியையும் கடைபிடிக்கவே விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தான்ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த மாதம் அதிபர் முஷாரப் இந்தியா வருவதால், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படும். இதில்எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக, முஷாரப் கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் மூன்று நாட்கள்சுற்றுப்பயணமாக ஜூலை 14 ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வரும் முஷாரப் 16 ம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார்.ஜூலை 15 ம் தேதி பிரதமர் வாஜ்பாயுடன் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜூலை 14 ம் தேதி டெல்லி வரும் முஷாரப்புக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14 ம்தேதி முழுவதும் முஷாரப் ராஷ்டிரபதி பவனிலேயே தங்குவார். அடுத்த நாள் காலை ஆக்ரா செல்லும் முஷாரப் பிரதமர் வாஜ்பாயைசந்தித்துப் பேசுவார். முஷாரப் அஜ்மீரில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications