ஜூலை 1 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்
சென்னை:
சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஜூலை 1 ம் தேதி முதல் கிருஷ்ணா நீரைத் திறந்து விடும்படி, முதல்வர்ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சென்னைக்கு கிருஷ்ணா நீரைத் திறந்து விடுவது குறித்து தேவையானநடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:
தற்போது சென்னை மாநகரத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கங்களில் இருக்கும் தண்ணீர் அக்டோபர்மாதம் பருவமழை வரும் வரை போதுமானதாக இருக்காது.
இதனால் தமிழகத்துக்குக் கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர், ஆந்திர மாநிலபொதுப்பணித்துறை அமைச்சருக்கு ஜூன் 6 ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கு பதில் இல்லாத காரணத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதா 13 ம் தேதி மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அதற்கும் பதில்கிடைக்கவில்லை.
உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் இதுகுறித்து விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுபேசினார்.
அப்போது, சந்திரபாபு நாயுடு பதிலளிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், ஆந்திர அரசின் தலைமைச் செயலரைச் சந்தித்துப்பேச வேணடும். இரு மாநில அதிகாரிகளும் கிருஷ்ணா நதிநீரை செனனைக்குக் கொண்டு வர வழி வகை செய்வார்கள் என்றும், இதற்குத்தான் முழுமையான ஒத்துழைப்பு நல்குவதாகவும் கூறினார். இதையடுத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, ஜூலை 1 ம் தேதி முதல்சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications