நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறிய காங்கிரஸ்: ப. சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

நெல்லிக்காய் மூட்டைபோல் காங்கிரஸ் சிதறிக் கிடக்கிறது என தமாகா ஜனநாயகப் பேரவை நிறுவனர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார்.

நாமக்கல் மாவட்ட தமாகா ஜனநாயகப் பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் 26 சதவீதம் பேர் இன்னும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வறுமையை ஒழிக்க பழிவாங்கும் நடவடிக்கை,தவறான பொருளாதாரக் கொள்கை, கவர்ச்சிகரமான கோஷங்களால், முடியாது. சேமிப்பு, முதலீடு, வளர்ச்சி, வருமானம் போன்றவற்றைவிஷ்ணு சக்கரமாகச் சுழற்றினால் மட்டுமே முடியும்.

தமிழகத்தில் வறுமை ஏற்பட நல்லாட்சி இல்லாததே காரணம். அரசியல் ஒழுக்கக் கேடான துறை என்பதாலும், தவறுகள் நிறைந்து விட்டனஎன்பதாலும், 42 சதவீதம் பேர் வாக்களிக்க முன்வரவில்லை. இவர்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கின்றனர். நல்லாட்சி நடக்க வேண்டும் எனஇவர்கள் ஆசைப்படுகின்றனர்.

கடந்த 32 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட ஆட்சி நடக்கிறது. இதில் மாற்றம் வேண்டும் என காங்கிரசாரும், வாக்களிக்காத 42 சதவீதம்பேரும் விரும்புகின்றனர். காங்கிரஸ் நெல்லிக்காய் மூட்டைபோல சிதறிக் கிடக்கிறது.

ஆனால், காங்கிரஸ் ஒரு ஜீவநதி. அது தமிழகத்தில் வற்றிப் போய் விடக் கூடாது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆளும் கட்சியாகஇருந்தால், காங்கிரஸ் எதிர்க் கட்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் மாற்றம் ஏற்படும் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+