புழுத்த அரிசி இல்லை: தேனியில் அதிகாரிகள் ஏமாற்றம்
தேனி:
தேனி மாவட்டத்திலிருக்கும் 5 சிவில் சப்ளை கிடங்குகளில் புழுத்துப்போன அரிசி இல்லாத காரணத்தால் சோதனையிட வந்தஅதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்ற சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 4,000 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.
மதுரை சிவில் சப்ளை கிடங்கிற்கு இந்த நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலிருக்கும் ரேஷன்கடைகளுக்கு மாதம் 3,520 டன் அரிசி தேவைப்படுகிறது. சத்துணவு மையங்களுக்கு 350 டன் அரிசி தேவைப்படுகிறது.
மாவட்டத்திலிருக்கும் 5 சிவில் சப்ளை கிடங்குகளில் அதிகபட்சமாக 12,000 டன் அரிசி மட்டுமே ஸ்டாக் வைக்க முடியும்.இதனால் ஒவ்வொரு மாதமும் மதுரை மற்றும் திண்டுக்கல்லிலிருக்கும் உணவுக் கழகத்திலிருந்துதான் தேனி மாவட்டத்திற்குதேவைப்படும் அரிசி வரவழைக்கப்படும்.
அந்த அரிசி ரேஷன் கடைகளுக்கும், சத்துணவு மையங்களுக்கும சப்ளை செய்யப்படும்.
இந்நிலையில், முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த அரிசிபுழுத்துப்போன அரிசி என அதிமுக குற்றம் சாட்டியது. இது தொடர்பாக தி.மு.க. அரசின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்திலிருக்கும் அனைத்து சிவில் சப்ளை கிடங்குகளிலிருக்கும் அரிசியைப் பரிசோதனை செய்யஉத்தரவிடப்பட்டது.
இதன்படி, தேனி சிவில் சப்ளை கிடங்குகளில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள், உணவுகடத்தல் தடுப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு சோதனையிட்டது.
இந்த சோதனையில் இருப்பில் இருந்த அரிசி புழுத்த அரிசி இல்லை. தரமான அரிசிதான் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து,அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications