உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ 4 லட்சம் நிவாரணம்
கோழிக்கோடு:
கோழிக்கோடு கடலுண்டி ஆற்றில் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ 4லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் தெரிவித்தார்.
ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. கடலுண்டிஆற்றுப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் இந்த ரயில் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
விபத்து நடந்த போது கடும் மழை பெய்துள்ளது. அங்கு தொடர் மழை பெய்வதால் மீட்புப்பணிகளில் பின்னடைவுஏற்பட்டுள்ளது.
மீட்புப்பணியில் கடற்படை, போலீஸ், நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரயில் ஆற்றில் கவிழ்ந்ததில் பல பயணிகள் ஆற்றில் உள்ள வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்கும்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு ரயில்பலமுறை குலுங்கியது என்றும் தெரிய வந்துள்ளது.
பல ஆண்டு பழமையான இந்த கடலுண்டி ஆற்றுப்பாலம் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில்உடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பதை முதற்கட்ட விசாரணைக்குப்பிறகுதான் தெரிவிக்கமுடியும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications