இலங்கை அரசியல் சிக்கல்: நார்வே முயற்சிக்கு பாதிப்பில்லை
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோதிலும், நார்வே தூதுக் குழுவின் சமரச முயற்சியில் எவ்வித இடையூரும் ஏற்படாது என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்அறித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரனில் விக்ரமசிங்கே கூறுகையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்நிறைவேற்றப்பட்ட போதும், நார்வே தூதுக்குழுவினரின் அமைதி முயற்சிக்கு நாங்கள் ஒரு போதும் தடை விதிக்க மாட்டோம். அவர்களின்அமைதி முயற்சிக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில் ரனில் விக்ரமசிங்கேவும், அதிபர்சந்திரிகா குமாரதுங்காவும் சந்தித்துப் பேசினர்.
இவர்கள் சுமார் ஒரு மணி நேரம் நடத்திய பேச்வார்த்தையில் நார்வே தூதுக்குழுவின் முயற்சிக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர்.
ஆளும் கட்சியான மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து,மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனது மெஜாரிட்டியை இழந்தது.
முன்னதாக, ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியால் இலங்கை இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கமுடியவில்லை என்ற காரணத்தால்தான்எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர் கட்சிகளும் சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
நாடாளுமன்றத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு (டெலோ) 5 இடங்கள் உள்ளன. டெலோ அமைப்பும் நம்பிக்கையில்லாதீர்மானத்துக்கு ஆதரவளித்தன என்பது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications