For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியா: மனைவியை கொன்ற இந்தியருக்கு ஜாமீன் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியை கொன்ற 36 வயது இந்தியருக்கு ஆஸ்திரேலியா, சிட்னியிலிருக்கும்பாராமட்டா நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

தரேந்திரா சிங் என்பவர் தன்னை விட்டு பிரிந்து வாழும் தனது மனைவியை வெள்ளிக்கிழமை கொன்றுவிட்டு தலைமறைவானார்.

தெற்கு ஆஸ்திரேலிய தலைநகரான அடிலெய்டுக்கு 230 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பெரி என்ற சுற்றுலா மையத்திற்குஅருகே இருக்கும் கார் பார்க்கிங்கில் அவர் தன்னை விட்டு பிரிந்து வாழும் மனைவியை சுட்டுக் கொன்றார்.

சிங்கும், அவரது மனைவியும் சில காலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருன்றனர். அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அவர்களது இரண்டு வயது குழந்தையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சிங் அதன் தாயிடம்காண்பிக்க வேண்டும். அதற்காக குழந்தையை வெள்ளிகிழமை பெரி என்ற சுற்றுலா மையத்திற்க்கு அழைத்து வந்தார் சிங்.அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தனது மனைவியை தர்மேந்தர் சிங் சுட்டுக் கொன்றார்.

சிங் தனது முன்னாள் மனைவியை சுட்டு கொன்றபோது சிங்கின் 2 நண்பர்களும் உடன் இருந்தனராம். ஆனால் அவர்கள் சிங் தனதுமுன்னாள் மனைவியைக் கொல்லப் போவதாக திட்டம் தீட்டியது குறித்து தங்களுக்கு முன்பே தெரியாது என போலீசில்கூறியுள்ளனர்.

சிங் தனது மனைவியை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். அங்கு அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரையும் துப்பாக்கியை காட்டிமிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிங்கின் மனைவி மருத்துவமனைக்கு செல்லும்வழியில் இறந்து போனார்.

சிங்கின் 2 வயது குழந்தை சவண்னா சிங்கிற்கும், அவரது மனைவிக்கும் இடையே நடைபெற்று வந்த சண்டையில் சிக்கி தவித்துவந்தது. தனது தாயை சுட்டதை கண்டதால் மூளை அதிர்ச்சியடைந்திருந்த அந்த குழந்தை தற்போது நலமாக இருப்பதாகபோலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்து விட்டு சிங் தனது குழந்தையுடன் தப்பி ஓடிய சிங் தன் குழந்தையுடன் தலைமறைவாக சுற்றி வந்தார். இந்நிலையில்சிங் சனிக்கிழமை போலீசில் சரணடைந்தார்.

இவர் தன்னை ஜாமீனில் விடுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் இவரது ஜாமீன் மனுவை நிராகரித்துஇவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்து விட்டனர்.

ஆனாலும் இவர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி மீண்டும் ஜாமீன் கோரவுள்ளார்.

சிங் தன் முன்னாள் மனைவியை சுட்டுக் கொன்று தப்பிய பின் அவரை தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் நியூ சவுத்வேல்ஸ் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் இவர்களிடம் சிக்கவில்லை.

போலீசார் சிங்கை தேடிவந்த சமயத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். 172 சென்டிமீட்டர் உயரமும், 80கிலோகிராம் எடையும், சுருண்ட கரும் முடியும் கொண்ட சிங்கை யாரும் கண்டால் நெருங்க வேண்டாம். மேலும் அவரிடம் கைதுப்பாக்கி இருப்பதால் அவரிடம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சிங் போலீசில் இதுவரை எந்த விதமான வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்றாலும் தான் கொல்வதற்காக பயன்படுத்தியஆயுதத்தை பெரிக்கு அருகிலிருக்கும் ரைட் ஆற்றிலிருந்து கண்டுபிடிக்க ஹார்ன்ஸ்பி போலீசுக்கு உதவுவதாக கூறியுள்ளதாகதெரிகிறது.

ஆனாலும் போலீசார் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்ததை தேடினார்களா இல்லையா என்பது குறித்து எதுவும்தெரிவிக்கவில்லை.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X