தமிழகத்தில் உயரப்போகும் மின்கட்டணம்? எவ்வளவு அதிகரிக்கும்.. இன்று முதல் தொடங்கிய கருத்து கேட்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மின்கட்டணம் தொடர்பான கருத்துகளையும், ஆலோசனைகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கோரியுள்ளது. இன்று முதல் 15 நாட்கள் வரை பொதுமக்கள் தங்களின் கருத்துகளை இணையதளம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டுக்கு முன்பு 8 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டண உயர்வை 2027 ம் ஆண்டு வரை மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
தொடங்கிய கருத்து கேட்பு
இதற்கிடையே தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) சார்பில் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு ஒழுங்குமுறைகள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்டு பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும், ஆலோசனைகளும் கேட்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிப்பது எப்படி?
பொதுமக்கள் www.tnerc.tn.gov.in என்ற இணையதளம் வழியாக இன்று முதல் 15 நாட்கள் வரை பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். பொதுமக்களின் இந்த கருத்துகளை தொடர்ந்து மின்கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். தற்போது நம்முடைய மின்வாரியம் அதிகப்படியான கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் இந்த முறை மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில் கருத்து கேட்பு தொடங்கி உள்ளது.
மின்கட்டணம் உயர வாய்ப்பு
இதனால் இந்த முறை மின்கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தமிழ்நாடு மின்வாரியம் அதிகப்படியான கடனில் உள்ளது. தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால் அதிக செலவு ஏற்படுகிறது. இதனால் கடந்த 2022ம் ஆண்டு முதல் 2027 வரை மின்கட்டணத்தை உயர்த்த ஏற்கனவே அனுமதி வழங்கியது. கடந்த திமுக ஆட்சியில் 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.
மின்கட்டணம் எவ்வளவு உயரும்?
மேலும் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்துவதற்கு சில முக்கிய நடைமுறைகள் உள்ளன. மின்கட்டண உயர்வு என்பது 6 சதவீதத்தை விட அதிகரிக்க கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில் எது குறைவோ அதனடிப்படையில் உயர்த்த வேண்டும் என்பது தான் பரிந்துரையாக உள்ளது. இதனடிப்படையில் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண், 3.16 சதவீதமாக இருந்ததால் 3.16 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே செலுத்துவதாக கூறியதால் பொதுமக்களுக்கு சுமை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications