சென்னை: குடிநீர் செலவைக் குறைக்க புதிய யோசனை
சென்னை:
நெய்வேலி, ஈரோட்டிலிருந்து தண்ணீரைக் கொண்டுவர ஆகும் செலவில் பாதியைக் கொடுத்தால் போதும்,சென்னையில் குறைபாடு இல்லாமல் குடிநீரை விநியோகிக்கத் தயார் என்று சென்னை குடிநீர் டாங்கர் லாரிஉரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக, நெய்வேலியிலிருந்தும்,ஈரோட்டிலிருந்தும் தண்ணீரை லாரிகள் மூலம் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தது தமிழக அரசு.
கடந்த வார ஆரம்பத்தில் நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமும், வார இறுதியில் ஈரோட்டிலிருந்து ரயில் மூலமும்சென்னைக்கு குடிநீர் வர ஆரம்பித்தது.
இந்த 2 இடங்களிலும் இருந்து சென்னைக்கு வரும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை குடிநீர் டாங்கர் உரிமையாளர்கள் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் வருமாறு:
நாங்கள் நேரடியாகவே சுத்தமான தண்ணீரைத்தான் மக்களுக்கு வழங்கி வருகிறோம். மேலும்,நெய்வேலியிலிருந்து குடி நீரைக் கொண்டுவர அதிக நேரமாகும், நிறைய நீர் வரும் வழியில் வீணாகப் போகும்.
நெய்வேலி-சென்னைக்கு இடையே இந்த லாரிகள் தினமும் 500 டிரிப்புகள் அடிக்கின்றன. ஆனால் எங்களால்1,000 டிரிப்புகள் வரைகூட இயக்க முடியும்.
எனவே, இந்த நெய்வேலி-சென்னை குடிநீர் லாரிகளின் ஒப்பந்தக் கட்டணத்தில் பாதி கொடுத்தால் போதும்.எந்தவிதக் குறைபாடும் இன்றி நாங்கள் குடிநீரை மக்களுக்கு அளித்து விடுவோம். இதனால் அரசுக்கும் செலவுமிச்சமாகும்.
மேலும், அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தண்ணீரை எடுக்க உரிமம் தர வேண்டும்.போக்குவரத்து-வருவாய்-காவல் துறை அதிகாரிகளின் தொந்தரவும் எங்களுக்கு இருக்கக் கூடாது ஆகியதீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications