மத்திய அமைச்சர் பஜ்ரங்தள்ளில் இணைந்ததற்கு கடும் எதிர்ப்பு
டெல்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பஜ்ரங்தள்ளில் மத்திய அமைச்சர் உமா பாரதிஇணைந்தது எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
உமாபாரதி, தன்னை துறவி என கூறிக்கொண்டு எப்போதும் காவி உடையுடன் காணப்படுவார். இவரும் பாபர் மசூதிஇடிக்கப்பட்டதில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர்.
அயோத்தியில் பாபர் மசூதி இருப்பதற்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஊர்வலங்களில் முக்கிய பங்கு வகித்தவர்உமாபாரதி. இது போன்ற ஊர்வலங்கள் பின்னர் பாபர் மசூதி இடிப்பிற்கு வழி வகுத்தது.
உமாபாரதி அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மதவிழாவில், விஸ்வ இந்துபரிஷத்தின் தலைவர் அசோக் சிங்ஹாலின் முன்னிலையில் பஜ்ரங்தள்ளில் இணைந்தார்.
பஜ்ரங்தள்ளில் இணைந்த உடனேயே, பஜ்ரங்தள் முஸ்லிம்களுக்கு எதிரான இந்து இயக்கம் என கூறப்படுவதை உமாபாரதிமறுத்தார்.
உமாபாரதி பஜ்ரங்தள்ளில் இணைந்தது முக்கிய எதிர்கட்சியான காங்கிரசின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது
மத்திய வியாைட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி பஜ்ரங்தள்ளில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்து - முஸ்லிம்ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பஜ்ரங்தள்ளில் அவர் இணைந்தது துரதிர்ஷ்ட வசமானது என காங்கிரஸ் கட்சி உமாபாரதியைகுற்றம் சாட்டியுள்ளது.
இது பற்றி காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான மோசினா கித்வாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டை துண்டாடநினைக்கும் இயக்கத்தில் மத்திய அமைச்சர் இணைந்தது வருந்தத்தக்கது. இது இந்தியாவின் ஒற்றுமை கொள்கைக்கு எதிரானதுஎன்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான மோதிலால் ஓரா கூறுகையில், தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வரும்இயக்கத்தில் மத்திய அமைச்சர் இணைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம், அயோத்தியில் இருக்கும் பழமை வாய்ந்த, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதிஇடிக்கப்பட்டது. இதில் பஜ்ரங்தள்ளின் தொண்டர்களுக்கு முக்கிய பங்குள்ளது என கூறப்பட்டது.
1999ம் ஆண்டு தொழு நோயால் பாதிக்கப்பட்டு வாடி வந்த ஏழை தொழு நோயாளிகளுக்கு உதவி வந்த ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ாசயும், அவரது 2 மகன்களையும் கொடூரமாக கொலை செய்த வழக்கிலும் பஜ்ரங்தள்தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ள பஜ்ரங்தள்ளில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் உமாபாரதிஇணைந்திருப்பதுதான் எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications