போதை பொருள் வழக்கு: சுதாகரனுக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
போதை பொருட்கள் வைத்திருந்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது தொடரப்பட்டவழக்கில் அவரது காவலை அடுத்த 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் அவர் நடத்திவரும் சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் செயலாளராகஇருந்து வந்த கோபு ஸ்ரீதர் என்பவரை கொலை செய்வதாக மிரட்டியதாக கொலை மிரட்டல் வழக்கும், போதைப் பொருள்வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சுதாகரன் செவ்வாய்க்கிழமை சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(26.6.2001) ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் சுதாகரனின் காவலை மேலும் 15 நாள் நீட்டித்துதீர்ப்பளித்தார்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுதாகரன் புதன்கிழமை முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.
கொலைமிரட்டல் வழக்கில் சுதாகரன் ஜாமீன் கோரியிருந்தார். அது தொடர்பாக அவர் சென்னை இரண்டாவது நீதிமன்றத்தில்புதன்கிழமை ஆஜராக வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications