ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா

Subscribe to Oneindia Tamil

பொலாவாயோ:

இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடந்து வரும் 2வது ஒரு நாள் போட்டியில்,தோல்வியின் விளிம்பில் நின்று தடுமாறிக் கொண்டிருந்த இந்தியா, கடைசியில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது.

3 நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.இவற்றில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகள்பெற்றுள்ளன. ஆனால், ஜிம்பாப்வே 2 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்னும் தன்னுடைய புள்ளிக்கணக்கைத் துவக்கவில்லை.

இந்நிலையில், இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.

டாசில் வென்ற இந்தியா முதலில் பீல்ட் செய்ய தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, மிகச் சிறப்பாக விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்இழப்புக்கு 234 ரன்களை எடுத்தது.

ஜிம்பாப்வேயின் விஷார்ட் 46 ரன்களும், கிராண்ட் பிளவர் 45 ரன்களும், துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் 42ரன்களும் எடுத்தனர். 58 ரன்கள் எடுத்த விட்டால், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவின் ஜாகிர் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அகர்கரும், கேப்டன் கங்குலியும் தலாஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.

235 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்யக் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பத்தில் ரொம்பவும்திணறியது.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் தண்டுல்கர் 9 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்தமோங்கியாவுடன், நின்று நிதானமாக ஆடினார் கேப்டன் சவ்ரவ் கங்குலி. ஆனால், மோங்கியா 37 ரன்களில்முட்டேன்டரா பந்தில் விட்டாலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்குத் திரும்பினார். இவருடையஎண்ணிக்கையில் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

பல மேட்சுகளில் சொதப்பிக் கொண்டிருந்த கங்குலி, இப்போட்டியில் மிகவும் பொறுமையாக விளையாடினார்.அவருடன் ராகுல் டிராவிட் ஜோடி சேர, 2 பேரும் நின்று நிதானமாக விளையாடி, சரிவிலிருந்த இந்திய அணியைவெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கங்குலி அருமையாக விளையாடினார். வழக்கமாகக் "கட்டை" போட்டுவிளையாடும் கங்குலி, தற்போது கிடைத்த பந்துகளையெல்லாம் மைதானத்தின் எல்லைக்கு விரட்டிக்கொண்டிருந்தார். செஞ்சுரியையும் நெருங்கினார்.

ஆனால், செஞ்சுரி அடிப்பதற்கான வாய்ப்பை 15 ரன்களில் நழுவவிட்டார் கங்குலி. கிராண்ட் பிளவரின் பந்தைசிக்ஸருக்கு உயர்த்த முயற்சித்தார். ஆனால், எல்லைக் கோட்டின் அருகே நின்ற கேம்ப்பல் அந்தப் பந்தைஅருமையாகப் பிடித்து, கங்குலியை மைதானத்தை விட்டு வெளியே விரட்டி விட்டார். 125 பந்துகளைஎதிர்கொண்ட கங்குலி, 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 85 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து மட்டை பிடிக்க வந்தவர்கள், பேருக்கு பிட்ச்சில் சிறிது நேரம் நின்றுவிட்டு, பெவிலியன் நோக்கிநடையைக் கட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், டிராவிட் எதற்கும் அஞ்சாமல், அசராமல் பந்துகளை விளாசித்தள்ளி, இந்தியாவின் வெற்றிக்கே காரணமானார்.

64 பந்துகளில் 72 ரன்களை எடுத்து, இந்தியாவின் "வின்னிங் ஷாட்"டையும் அடித்தார் டிராவிட். அவர் 7பவுண்டரிகளையும் அடித்துள்ளார். அவருக்குத் துணையாகக் கடைசியில் ஆடிக் கொண்டிருந்த அஜீத் அகர்கர், 12பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை எடுத்திருந்தார்.

கைகளில் 4 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு, 4 பந்துகள் மீதமிருக்கையில், 237 ரன்கள் பெற்று, இந்தியாஅபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது.

அடுத்தடுத்து 3 தோல்விகளைத் தழுவியதால், ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பைஇழந்துவிட்டது.

இறுதிப் போட்டி, வரும் ஜூலை 7ம் தேதி இந்தியாவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இடையேநடைபெறும்.

இந்த 3 நாடுகள் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி இன்னும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன்ஒருமுறைகூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+