புதிய தமிழகம் கட்சி துணைத் தலைவர் படுகொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் துணைத் தலைவரும், பஞ்சாயத்துத் தலைவருமான ராமர் தூத்துக்குடிஅருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநிலப் பொருளாளார் முடக்கத்தான் பாண்டியன் மதுரையில் கொல்லப்பட்டசூடு இன்னும் தணியாத நிலையில் மற்றொரு தாழ்த்தப்பட்ட பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளதால் தென்மாவட்டங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எட்டயபுரம் அருகே உள்ள பாண்டியபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராமர். இந்த ஊரின் பஞ்சாயத்துதலைவராகவும் அவர் இருந்து வந்தார். புதிய தமிழகம் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவராகவும் இருந்துவந்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் இரவு ஷிப்ட் வேலைக்காக வீட்டிலிருந்து தனது மோட்டார்சைக்கிளில் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.
பாண்டியபுரம் தாண்டி புதூர் என்ற இடத்தில் அவர் வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே மறைந்திருந்த 4 பேர்கொண்ட கும்பல் ராமரை தடுத்து நிறுத்தியது.
பின்னர் தங்களிடமிருந்து அரிவாள்களால் அவர்கள் ராமரை வெட்ட ஆரம்பித்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்டராமர் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அக்கும்பல் அவரை விடவில்லை. துரத்திச் சென்று ராமரை சரமாரியாகவெட்டித் தள்ளியது.
உடல் எங்கும் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் அங்கேயே இறந்தார் ராமர். அவருக்கு மனைவியும், 3மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
பழிக்குப் பழியா?:
பழிக்குப் பழி வாங்குவதற்காகவே இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்று போலீஸார் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் பகுதியில் கனகராஜ் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
அந்தக் கொலையைச் செய்தவர்களுக்கு ராமர் அடைக்கலம் கொடுத்ததோடு அவர்களுக்கு பல உதவிகளையும்புரிந்தார் என்று தெரிகிறது. இதையடுத்தே கனகராஜ் தரப்பினர் ராமரைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டுள்ளனர்என்று போலீசார் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications