மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இருப்பு
சென்னை:
மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீரை வைத்து அடுத்த மாதம் இறுதிவரை பாசனத்திற்குப் பயன்படுத்தமுடியும் என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறின.
கடந்த ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.நொடிக்கு 2,000 கன அடி வீதம் ஆரம்பத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு தற்போது 11,000 கனஅடியாக உள்ளது.
அதே போல் நொடிக்கு 199 கன அடி வீதம் தற்போது மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கர்நாடகத்தின் கபினி அணைப் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், விரைவில் இந்த அணைநிரம்பி, பின்னர் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜூலை முதல் வாரத்தில் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 47டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு மேட்டூர் அணையில் உள்ளது.
120 அடி நீர்மட்ட உயரம் உள்ள மேட்டூர் அணையில் தற்போது 85.07 அடி தண்ணீர் உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications