போலியாய் ஒரு போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

போலீஸ் ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு ஒரு நாள் முழுவதும் டெல்லியில்போலியான போலீசாக வலம் வந்தார் நிருபர் ஒருவர். அவரை எந்த போலீஸ்அதிகாரியும், காவலரும் போலியானவர் என்பதைக் கண்டுபிடிக்கவில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபரான ராகுல் சாப்ரா ரூ. 1,100 செலவு செய்து போலீஸ்சீருடையை வாங்கினார். போலீசுக்குரிய தொப்பி, பெல்ட், ஷூ என அனைத்தையும்விலைக்கு வாங்கினார்.

இவற்றை அணிந்து கொண்டு போலீஸ்காரராகவே மாறினார்.

டெல்லி சாலையில் சென்ற ஸ்கூட்டரையும் நிறுத்தி லிப்ட் கேட்டு குஷியாக சவாரிசெய்தார். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டம் டெல்லியில் உள்ளது இவர் அதையெல்லாம் மீறி ஹெல்மெட்இல்லாமல் சவாரி செய்தார்.

பின்னர் ஆட்டோவில் போலீஸ் எனக் கூறி இலவசமாக பயணித்தார்.

இவரைப் பார்த்த சாலையில் சென்ற போலீஸ் அதிகாரிகள் கூட இவர் மீதுசந்தேகப்படவில்லை.

தனது அனுபவம் பற்றி ராகுல் சாப்ரா கூறுகையில், இது நம்பமுடியாத விஷயம்தான்.ஆனால் உண்மையானது.

போலீஸ் சீருடையை விற்பதற்கு பல கடைகள் உள்ளன. போலீஸ் தொப்பி, பெல்ட்,போலீசார் அணிந்து கொள்ளும் பூட்ஸ், நேம் பிளேட், லத்திகள் போன்றவையும் இந்தகடைகளில் கிடைக்கின்றன.

போலீஸ் சீருடையை ரூ. 670 கொடுத்து ஒரு நாளுக்குள் பெற்றேன். மற்றபொருட்களை பெறுவதற்கு நான் ரூ. 430 மட்டுமே செலவு செய்தேன். போலீசின்அடையாள எண்ணுடன் கூடிய பெல்ட் பக்கிள் வாங்குவதற்கு ரூ. 70 செலவானது.

போலி அடையாள எண்ணுடன் பெல்ட் கொடுப்பது பிரச்சனைக்கு வழி வகுக்கக்கூடும்என பெல்ட்டை விற்ற கடைக்காரர் கூறினார். ஆனால் மற்ற கடைக்காரர்கள் யாரும்எதுவும் கூறவில்லை என்றார்.

சாப்ராவிற்கு போலீஸ் சீரூடை தைத்துக் கொடுத்த தையற்காரர் கூறுகையில்,எங்களிடம் போலீஸ் சீருடை தைக்க ஆர்டர் தருபவர்கள் போலீசா இல்லையாஎன்பதை நாங்கள் அவர்கள் மேனரிசம் மூலமே தெரிந்து கொண்டு விடுவோம்என்றார்.

ஆனால் அவரிடம் சாப்ரா போலீஸ் சீருடை தைக்க ஆர்டர் கொடுத்த போதுஅவராலும் சாப்ரா உண்மையான போலீஸ் இல்லை என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை.

சாப்ரா போலீஸ்காரர் போல் வேடமணிந்து நடித்ததற்கான காரணம் குறித்து அவர்பணிபுரிந்து வரும் பத்திரிக்கை கூறுகையில், சாப்ரா போலீஸ் போல் வேடம்போட்டதன் நோக்கம், டெல்லி போலீசார் தங்கள் அடையாள அட்டையைஅனைவரும் அறியும் விதமாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதைசட்டமாக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

கலவரமோ, பதட்டமோ ஏற்படும் சமயங்களில் மட்டும் அடையாள அட்டையைபோலீசார் அணிந்து வருகிறார்கள். மற்ற நேரங்களில் அணிவதில்லை. அதுதவிர்க்கப்பட வேண்டும்.

அவர்கள் எப்போதும் அடையாள அட்டை அணிய வேண்டும் என சட்டம்இயற்றப்பட வேண்டும். அவ்வாறு சட்டம் இருந்திருந்தால் சாப்ராவை போலியானபோலீஸ் என எளிதாக அடையாளம் கண்டிருக்க முடியும்.

சாப்ரா அடையாள அட்டை இல்லாமல் சென்றபோது அவர் போலீஸ்காரர் இல்லைஎன்பதை யாராலும் கண்டு பிடிக்கவில்லை.

சாப்ராவை எந்த போலீசாரும் சந்தேகப்படவில்லை. போலீஸ் துணை கமிஷனர்அலுவலகத்தில் இவர் நுழைந்தபோது கூட அங்கிருந்தவர்கள் இவர் மீது சந்தேகம்கொண்டு கேள்வி கேட்கவில்லை.

அடையாள அட்டைகளை எப்போதும் போலீஸ்காரர்கள் அணிவதுகட்டாயமாக்கப்படுவது, கிரிமினல்களும், தீவிரவாதிகளும் காக்கி உடையை அணிந்துஏமாற்றுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள்இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம் என அந்தப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+