இந்தியாவிற்கு புதிய அமெரிக்க தூதர்
வாஷிங்டன்:
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக ராபர்ட் பிளாக்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர்இந்தியாவிற்கு வருவார் என்று நம்பப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஜார்ஜ் புஷ், ராபர்ட்டை இந்தியாவின் புதிய தூதராகநியமித்துள்ளார். இவர் முந்தைய புஷ் ஆட்சிக் காலத்தில், அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு முக்கியஅதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாகவே, இந்தியாவை புகழ ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்லப்போனால், அவர் இந்தியாவுக்கு நன்றாக "சப்போர்ட்" பண்ணியே பேசி வருகிறார்.
கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்த கையோடு, இந்தியா மீது பொருளாதாரத்தடையை அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அமல் படுத்தினார்.
ஆனால், தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதியில் கிளிண்டன் இந்தியாவிற்கு விஜயம் செய்ததிலிருந்தேஅமெரிக்காவின் அணுகுமுறையில் ஏகப்பட்ட மாறுதல்கள் தெரிந்தன; இப்போதும் தெரிகின்றன.
விரைவில் இந்தியாவின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் நீண்ட நாட்களாகவேஎதிர்பார்க்கப்பட்டும் வந்தது.
ராபர்ட் கூறுகையில், "இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் தோல்வியடைந்து விட்டன.அதனால் இத்தடையை உடனடியாக நீக்க வேண்டும்" என்று கூறி அமெரிக்க அரசாங்கத்தை வற்புறுத்தஆரம்பித்துள்ளார்.
இவர் இப்படிக் கூறினாலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தமான என்.டி.பி.டியில் கையெழுத்திட வேண்டும் என்றுஅமெரிக்காவும் இந்தியாவைத் தொடர்ந்து வற்புறுத்தும்.
இந்நிலையில், விரைவில் இந்தியா வந்து அமெரிக்க தூதராகப் பதவி ஏற்கவிருக்கும் ராபர்ட்டும் இதற்கான"பொடி"களை அமெரிக்க அரசிடம் தூவி வருகிறார். அநேகமாக, அவர் இந்தியா வருவதற்குள் இந்தப்பொருளாதாரத் தடை நீங்கினால்கூட ஆச்சர்யம் இல்லை.
இந்தியா-அமெரிக்காவிற்கு இடையே தொழில், வர்த்தகம் முதலான பல வர்த்தக ஒப்பந்தங்களையும் நீண்டகாலமாகக் கவனித்து வருபவர் ராபர்ட். மேலும், தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் இந்த 2 மிகப் பெரும்குடியரசுகளும் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அனைத்து வழிகளையும் "பாஸிட்டிவ்"வாகவே ராபர்ட் யோசித்து வைத்திருப்பதால், இவர் இந்தியாவிற்குவந்த பிறகு, யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இந்திய-அமெரிக்க உறவு அவ்வளவு நெருக்கமாகஇருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications