ஜெ. வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றங்கள்: மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரின் ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றங்களின்ஆயுட்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, சசிகலா, அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த ஊழல்கள் தொடர்பானவழக்குகளை விசாரிக்க கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதில் ஜெயலலிதா பலமுறை ஆஜராகியுள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததையடுத்து இந்த நீதிமன்றங்களின்நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நீதிமன்றங்களின் ஆயுட்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இப்போது அதிமுக ஆட்சியில்இருப்பதால், ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதி அமைத்த இந்த நீதிமன்றங்களைக் கலைத்து விடுவார்கள் எனஎதிர்பார்க்கப்பட்டது.
அல்லது அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்காமல் நீதிமன்றத்தை நட்டாற்றில் விட்டுவிடுவார்கள் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் காய்களை நகர்த்துவதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்ட ஜெயலலிதா இந்தநீதிமன்றங்களை மீண்டும் 1 ஆண்டு காலத்துக்கு நீட்டித்துள்ளார்.
முதல்வர் பதவியில் தொடர 6 மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றநிர்பந்தத்தில் உள்ள ஜெயலலிதா, நீதிமன்றங்களைக் கலைப்பதன் மூலம் தனக்கு எதிராக மக்கள் திசைதிரும்பிவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த நீதிமன்றங்களில் கருணாநிதி காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளை அந்த நீதிமன்றங்களில்வைத்தே முறியடித்து வழக்குகளை உடைத்தெறியவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இதற்காகவே நீதிமன்றங்களை அவர் நீட்டித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா பேட்டி:
இது குறித்து சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தனிநீதிமன்றங்களின் பதவிக்காலம் இந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே நடைமுறைகளின்படி மேலும் 1 ஆண்டுக்கு அவற்றின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறது.
நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி நீடிக்கும் என்றே நம்புகிறேன். எங்களதுகூட்டணியில் இப்போதைக்கு மாற்றம் ஏதும் இல்லை.
இப்போதுள்ள ஊராட்சி அமைப்புகளை கலைக்கும் எண்ணம் ஏதும் அரசிடம் இல்லை.
ராஜ்யசபைத் தேர்தலில் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 5-வது தொகுதியில்யார் போட்டியிடுவது என்பதை இப்போது கூறுவதற்கில்லை.
ஆயுதங்களுடன் வந்தார் பொன்முடி:
விழுப்புரம் அரசு தானிய கிட்டங்கிக்குள் 50க்கும் மேற்பட்டவர்களுடன் ஆயுதங்களுடன் புகுந்து அத்துமீறி நடந்துகொண்டதற்காகவே முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எம்.எல்.ஏவாகவேஇருந்தாலும் கூட அத்துமீறி நுழைய அவருக்கு அதிகாரம் கிடையாது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒத்துக்கொண்டுள்ளார். இந்தத் தண்ணீர் ஜூலை மாதம் 1ம் தேதிக்குள் சென்னை வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.எனவே சென்னை குடிநீர்ப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications