காடுகளில் போர்: அமெரிக்க ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி
டெல்லி:
அமெரிக்க ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் வந்து பயிற்சி பெறுவது இதுதான் முதல்முறையாகும்.
தீவிரவாதிகளை ஒடுக்குவது, காடுகளுக்குள் சென்று போரிடுவது போன்றவற்றிற்கானபயிற்சிகளை மிசோரம் மாநிலத்தில் உள்ள வைராங்கட் ராணுவ பயிற்சி கல்லூரிஅளிக்கவுள்ளது.
இது குறித்து திரிபுரா மாநிலம், அகார்தலாவில் உள்ள ராணுவத்தின் 3வது கார்ப்ஸ்பிரிவின் காமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஷெர்கில் கூறுகையில்,
அமெரிக்க முப்படை கூட்டு துணை தலைவர் ஜெனரல் ஹென்றி ஷெல்டன் ஜுலைமாதம் இந்தியா வருகிறார். அப்போது அமெரிக்க ராணுவத்தினருக்கு இந்தியராணுவம் பயற்சியளிப்பது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றார்.
இந்திய ராணுவம் பல வெளிநாட்டு ராணுவ வீர்ரகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.ஆனால், அமெரிக்க ராணுவத்தினருக்கு இதுவரை இந்தியாவில் பயிற்சிஅளிக்கப்பட்டதில்லை. ஆனால், அமெரிக்க ராணுவத்துக்கும் விரைவில் பயிற்சிஅளிக்கப்படும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்ஆஸ்திரேலியா சென்றிருந்த போது கூறியிருந்தார்.
ஆனாலும் அமெரிக்க ராணுவத்தினருக்கு இந்திய ராணுவப்பகுதிகளில் வந்துபயிற்சிபெற அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து உடனடியாக கூற முடியாதுஎன்றும் கூறியிருநத்தார்.
சோவியத் யூனியன் உடைந்த பின் இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்பட்டுவருகின்றன. இந்தியா 1998ம் ஆண்டு அணு குண்டு சோதனை செய்தபின்புஅமெரிக்கா அமல்படுத்திய பல பொருளாதார தடைகளை தற்போது அமெரிக்காவிலக்கிக் கொண்டுவிட்டது.
அமெரிக்க ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி என்பதை சில ஆண்டுகளுக்கு முன்நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. இப்போது இந்திய - அமெரிக்க நட்புறவு மிகவேகமாக மேம்பட்டு வருவதையே இந்த பயிற்சி எடுத்துக் காட்டுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications