கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
கோவை:
கோவையில் ஓய்வு பெற்ற எலக்ட்ரீசியன் கொலை தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை ஜெகந்நாதர் வீதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (61). இவர் வருமான வரித் துறையில்எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், சில தனியார்களுக்குதன்னால் இயன்ற வேலைகளைச் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேணுகோபாலை நள்ளிரவில் சிலர் வந்து மோட்டாரை சரி செய்து தரும்படிவற்புறுத்தி அழைத்துள்ளனர். அவர்களுடன் சென்ற வேணுகோபால் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது புலியகுளம் அருகே உள்ளஹவுசிங் யூனிட்டில் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
இக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எவ்விததடயமும் கிடைக்காமல் தடுமாறினர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் மர்மமே நீடித்து வந்தது.
இந்நிலையில் கொலையில் தொடர்புடையதாக போலீசார் சந்தேகப்பட்ட வெங்கடேஷ் என்பவர் திருப்பூர்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கிச்சான், சுந்தரமூர்த்தி ஆகியோரும்கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அதிமுக பிரமுகர் வெங்கடேஷின் தலைமையில் கூலிப் படையாகசெயல்பட்டு வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications