ஸ்ரீநகர்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் அருகே கார்டுங்லா பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் 300 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 72 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பயணிகளில் 3 பேர் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள்.

இதுகுறித்து லெஹ் துணை போலீஸ் கமிஷனர் கூறுகையில், லெஹ் பகுதியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கார்டுங்லாபகுதியில் சாலை பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு நோப்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் அங்குள்ள 300 அடி ஆழபள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த விபத்தில் 17 பயணிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மேலும் 3 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகளில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது.

ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் உயிரிழந்த பயணிகளின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயமடைந்த பயணிகள் லெஹ் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+