நாளை அமைச்சராகிறார் வளர்மதி ஜெபராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய அமைச்சராக மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வளர்மதி ஜெபராஜ் வெள்ளிக்கிழமைபதவியேற்கிறார்.

ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இது 3-வது முறையாகும். முதல்வர்ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 3 அமைச்சர்கள்பதவியேற்றனர்.

அதன் பிறகு ஆலங்குடி வெங்கடாச்சலம் நீக்கப்பட்டு புதிய அமைச்சராக வளர்மதி ஜெபராஜ் நியமிக்கப்பட்டார்.அவர் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்.

ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடக்கும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பாத்திமா பீவி,வளர்மதிக்கு பதவிப் பிரமாணமும் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

வளர்மதி ஜெபராஜ் மதுரை மேற்குத் தொகுதியில் மாஜி சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனைத் தோற்கடித்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையைச் சேர்ந்த வளர்மதி ஜெபராஜ் கிறிஸ்தவ நாடார் இனத்தைச் சேர்ந்தவர். மிகவும் எளியவர். வளர்மதியின்படிப்பு மற்றும் திருமணத்திற்கு உதவியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் உதவியால் படித்து வளர்ந்த வளர்மதி தற்போது அவரது ஆசியால் எம்.எல்.ஏவாகவும்,அமைச்சராகவும் ஆகியுள்ளார்.

மிகவும் அமைதியானவர், எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் என்ற பெயரைப் பெற்றவர் வளர்மதிஜெபராஜ். வக்கீலுக்குப் படித்தவர்.

ஜெயலலிதா, வளர்மதி ஆகியோரைச் சேர்த்து தற்போது தமிழக அமைச்சரவையில் மொத்தம் 4 பெண் அமைச்சர்கள்உள்ளனர். இது தமிழக வரலாற்றில் சாதனையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+