இந்திய டாக்டர்களுக்கு பிஜியில் மவுசு
சுவா:
பிஜியில் கடந்த வருடம் புரட்சி நடந்ததையடுத்து அங்கு டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்இந்தியாவிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும் டாக்டர்களை தேர்வு செய்ய தயாராகி வருகிறது பிஜி.
கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான கலவரக்காரர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர்மஹேந்திர சவுத்ரியையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் சிறைவைத்தனர்.
இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. பின்னர் ராணுவத்துக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே நடந்தபேச்சுவார்த்தையின் அடிப்படையில் மஹேந்திர சவுத்ரி விடுவிக்கப்பட்டார்.
பிஜியில் கலவரம் நடந்த போது 32 டாக்டர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா மற்றும் பிலிப்பைன்சிலிருந்து டாக்டர்களைத்தேர்வு செய்ய பிஜி டாக்டர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
டாக்டர் நாகநீலி கோன்யாலி இந்தியாவிலிருந்து 6 டாக்டர்களையும், பிலிப்பைன்சிலிருந்து 56 டாக்டர்களையும் தேர்வு செய்யஉள்ளதாகத் தெரிவித்தார்.
அறுவைசிகிச்சை உள்பட மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் இந்திய டாக்டர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
பிஜியில் உள்ள முக்கிய நகரங்களான சுவா, லம்பாஸா மற்றும் லாக்டோகாவில் இந்திய டாக்டர்கள் அதிக அளவில் பணிபுரிந்துவருகிறார்கள். இதனால் இந்திய டாக்டர்களுக்கு பிஜியில் மவுசு அதிகரித்துள்ளது.
மேலும் பிஜியில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு ஆஸ்திரேலியாவும் முக்கியக் காரணம் வகிப்பதாக பிஜிகுற்றம்சாட்டியுள்ளது.
பிஜி டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறையில் பல பரிவுகளில் பணிபுரிவோரை ஆஸ்திரேலியா தேர்வு செய்து தங்கள் நாட்டுக்குசேவை செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் பிஜி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பிஜியில் பணிபுரிந்து வந்த இந்திய டாக்டர்கள் அங்கு நடந்த கலவரத்துக்குப் பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்குச்சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications