சிறையில் வைக்க கருணாநிதியின் உடல் நிலை அனுமதிக்காது- மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தி.மு.க.தலைவர் கருணாநிதியைபரிசோதனை செய்த அவரது குடும்ப மருத்துவர் அவரை சிறையில் அடைக்கும்அளவுக்கு உடல் நிலை அனுமதிக்காது எனக் கூறியுள்ளார்.

எனவே, அவரை சிறையில் அடைக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அடுத்தமாதம் 10ம் தேதிவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகருணாநிதியை அவரது குடும்ப மருத்துவரும், அரசு மருத்துவர் குழுவும் பரிசோதனைசெய்து அவர் உடல்நிலை குறித்து ரிப்போர்ட் கொடுத்த பின்புதான் அவரை சிறையில்அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஆனால் முதலில் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதியளிக்கவில்லை.பின்னர் போலீசார் அனுமதியளித்தனர்.

கருணாநிதியை அவரது குடும்ப மருத்துவர் கருணாநிதியின் குடும்ப மருத்துவரும்,அரசு மருத்துவ குழு மருத்துவர்களும் பரிசோதனை செய்தனர்.

கருணாநிதியை பரிசோதனை செய்த பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சிறையில்அடைக்கப்படுவதற்கு அவரது உடல்நலம் இடம் தராது என்றார்.

ஆனால், கருணாநிதியை பரிசோதித்த அரசு மருத்துவகுழுவினர் எந்த கருத்தும்தெரிவிக்க மறுத்துவிட்டனர். எங்கள் பரிசோதனை ரிப்போர்டை நாங்கள் அரசிடம்தெரிவிப்போம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+