For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டுமிராண்டித்தனம்: பிகாரை வென்றது தமிழகம்

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தமிழகத்துக்கு மிகப்பெரியதலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே காட்டுமிராண்டித்தனமான அரசு என்று வர்ணிக்கப்பட்ட பிகாரின் லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் கூடஇதுபோன்ற மிகவும் கீழ்த்தரமான சம்பவம் நடந்ததில்லை.

நாங்கள் ஒருபோதும் எங்களது எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை இவ்வளவு இழிவாக நடத்தமாட்டோம். அரசியல்காழ்ப்புணர்ச்சியை ஒருபோதும் இவ்வளவு மோசமான முறையில் வெளிப்படுத்த மாட்டோம். தமிழக போலீஸார் மிக, மிகமோசமாக கருணாநிதியை அடித்து, இழுத்துச் சென்றது மிகக் கொடூரமானது என்று கூறுகின்றனர் பிகார் அரசியல் தலைவர்கள்.

இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, பிகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது பிகார் முதல்வராக இருந்த ஜகன் நாத் மிஸ்ரா, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல்எதிரியான எஸ்.என். சின்ஹாவை சிறைக்குச் சென்று பார்த்தார்.

மிஸ்ரா முதல்வராக இருந்த போது, பிகாரில் பலமுறை சட்டம்-ஒழுங்கு கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. அப்போது கடும்கண்டனக் குரல் கொடுத்தவர் லல்லு பிரசாத் யாதவ்.

சில ஆண்டுகளில், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லுவும், மிஸ்ராவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது,இருவரும் ஒன்றாகச் சேர்ந்து டிபன் சாப்பிடச் சென்ற சம்பவமும் உண்டு. இருப்பினும் இருவரும் அரசியலில் பரம வைரிகள்என்பது வேறு விஷயம்.

கருணாநிதி கைது செய்யப்பட்டு, சுழன்று, சுழன்று அடித்து இழுத்துச் செல்லப்பட்ட காட்சியைப் பார்க்கும்போது, தமிழகத்தில்ஒருபோதும் இதுபோல் ஜனநாயக விரோதச் செயல்கள் நடக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது என்று கூறுகிறார் மத்தியதகவல்தொடர்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்.

எவ்வளவுதான் அரசியல் எதிரிகளாக இருந்தாலும், பிகார் அரசியல்வாதிகள் தங்களுக்குள் மரியாதையைக் கடைபிடிக்கும்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பாஸ்வான், நிதிஷ்குமார், சரத் யாதவ், சத்ருகன் சின்ஹா மற்றும் சசிக்குமார் மோடி ஆகியோர் லல்லு பிரசாத் யாதவின் அரசியல்எதிரிகள். இருப்பினும் இவர்கள் அனைவரும் 1999 ம் ஆண்டு நடந்த லல்லுவின் மகள் திருமணத்துக்குச் சென்றனர்.

திருமண வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை என்கிறார் நிதிஷ் குமார்.

இதற்கிடையே, சமீபத்தில் பாஸ்வான் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் லல்லுவும் கலந்து கொண்டார் என்பதுதான் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயம்.

பீகாரை வென்றுவிட்டது தமிழகம், காட்டுமிராண்டித்தனத்தில்..

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X