“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி
சென்னை: "கட்சி ஆரம்பிச்சு இப்பதான் ஃபர்ஸ்ட் கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன? நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்க்காதீங்க." என தவெகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது அதிமுக.
அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்.எல்.ஏக்களை தவெக தலைவர் விஜய் இழுத்துள்ளதாக விமர்சித்திருந்தார்.

தவெகவின் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி எழுப்பிய விமர்சனங்களுக்கு தவெக பதில் அளித்திருந்தது. "ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கட்சியின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்." என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக ஐடி விங் பதிலடி
தவெகவின் இந்த கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. அதிமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தவெக ஆச்சரியக்குறிகளே! இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா?
தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.. ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது!
தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்?
இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா?
குதிரை பேரம் வெட்ட வெளிச்சம்
இல்ல, பதவி + பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ?
குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ்!
தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு.
ரீல்ஸ் போட்டு விளையாடுங்க
கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க.
உங்க கொள்கை என்ன? நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க.
ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு. இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க .. போய் reels போட்டு விளையாடுங்க பாஸ்..!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications