தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ்
சென்னை: தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள், கொள்கை கொள்கைனு சொல்லி என்னத்த சாதித்தீர்கள் என தனக்கு மெசேஜில் கேட்ட நிர்வாகிக்கு, சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி என்ன பதிலை சொல்லியுள்ளார் என்பதை பாருங்க.
நடந்து முடிந்த 2026 சட்டசபைத் தேர்தலில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் 19,139 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்ரீநிதி, தற்போது தவெக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.

"பிரிவினைவாத சக்திகளோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. அப்படியிருக்க, என்.டி.ஏ (NDA) கூட்டணியின் ஆதரவோடு தேர்தலில் வென்ற மூன்று எம்.எல்.ஏ-க்கள், தகுதி நீக்கச் சட்டத்திலிருந்து தப்பிக்க 21 நாட்களுக்குள் தவெகவில் இணைந்தது எப்படி? இதற்கு காங்கிரஸ் தலைமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை கொடுத்தது. அதில் மதவாத சக்திகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது, என்டிஏ கூட்டணியினரிடம் ஆதரவு கோரக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியின் ஆதரவோடு வென்ற மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தவெக அரசு அமைந்தவுடன் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
இதை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ஸ்ரீநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் "தவெகவுக்கு எதிராக ஏன் போஸ்ட் போடுகிறீர்கள், இப்போதைக்கு அமைதியாக இருங்கள். கொள்கை கொள்கைனு பேசி நாம் என்னத்த சாதித்தோம். தவெக அரசுடன் சுமூகமாக போய் ஏதாவது வாரிய தலைவர் பதவியை வாங்கிக் கொள்ளுங்கள்" என அவர் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்து சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதற்கு அவர் தனது பதிலில், இப்படி தான் பலரும் அமைதி காத்து கொண்டு இருகிறார்கள் போல .
எனக்கு ஆதாயம் தான் வேண்டும் என்றால் 2021 ல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியில் சேர்ந்துஇருக்கலாம் .
இப்படி சூழலிலும் எப்படி?
காங்கிரஸுக்கு ஒவ்வாத NDA கூட்டணி முன்னாள் mla ஏற்க கூடாது என்று சொன்னது குத்தமா என கேள்வி எழுப்பியுள்ளார். என்னதான் ஒருவர் எதிர்த்து ஸ்ரீநிதிக்கு மெசேஜ் போட்டிருந்தாலும் ஸ்ரீநிதி கொடுத்த பதிலுக்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து கமென்ட் போட்டுள்ளார்கள்.
நீங்கள் அரசியலில் நீண்ட நாள்கள் நீடித்து நல்ல நிலைக்கு வருவீர்கள் என ஒருவர் தெரிவித்துள்ளார். "அப்படி பார்த்தா திமுக கூட்டணில இருந்த நீங்களே தவெகவுக்கு வந்திருக்கக் கூடாது என தவெகவை சேர்ந்த ஒருவர் பதிலளித்துள்ளார்.
-
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம்












Click it and Unblock the Notifications