மாறன், பாலுவும் விடுதலையாக மறுப்பு
சென்னை:
தங்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு வாபஸ் வாங்காத வரை தங்களுக்கு வழங்கப்பட்ட விடுதலை உத்தரவைஏற்கப் போவதில்லை என மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வர மறுத்துவிட்டனர். மாறன் உடல்நிலை பாதிக்கப்பட்டுஅப்பல்லோ மருத்துவமனையில் தான் உள்ளார். அங்கு தான் அவரை போலீசார் கைது செய்து வைத்திருந்தனர்.
பாலு வேலூர் சிறையில் உள்ளார்.
முன்னதாக மத்திய அரசின் நிர்பந்தத்தின் பேரில் அமைச்சர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க ஜெயலலிதாஅரசு ஒப்புக் கொண்டது. இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தது.
அதில் அமைச்சர்கள் இருவர் மீதான முதல்கட்ட விசாரணை முடிந்துவிட்டதால், அவர்களை ஜாமீனில் விடுதலைசெய்யலாம் எனக் கூறியிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி அமைச்சர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
ஆனால், இந்த விடுதலையை ஏற்க மாறனும், பாலுவும் மறுத்துவிட்டனர். எங்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறும் வரை விடுதலையாக மாட்டோம் எனக் கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications