இன்று மாலை மீண்டும் கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படுமா?
டெல்லி:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதால், தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதிக்க மத்தியஅமைச்சரவை திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கூட உள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 355வது பிரிவு அல்லது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 356வதுபிரிவை தமிழ்நாட்டில் அமல்படுத்தவது குறித்து விவாதிக்கப்படும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 355வது பிரிவு அமல்படுத்தப்பட்டால் அதன்படி கைது செய்யப்பட்டுள்ள மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் விடுதலை செய்ய அது வழிவகுக்கும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356வது பிரிவு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சிவர அது வழி வகுக்கும்.
இந்த கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சகம் சார்பாக தமிழகம், மத்தியசிறப்பு உள்துறை செயலாளர் தலைமையில் சென்று வந்த குழுவினர் சமர்பிக்கும் அறிக்கை குறித்து விவாதிக்கும.
மேலும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படாத தமிழகவிஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
யு.என்.ஐ.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications