பந்த் தோல்வி என்கிறது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திங்கள்கிழமை நடந்த பந்த் தோல்வியடைந்து விட்டது என்கிறார் தமிழகப் போலீஸ் டி.ஜி.பியான ஏ.ரவீந்திரநாத்.

முன்னாள் தமிழக முதல்வர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும்டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர்திங்கள்கிழமை பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பித்த பந்த் மாலை 6 மணிக்கு முடிந்தது.

இதுகுறித்து, டி.ஜி.பி. மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்த பந்த் தோல்வியடைந்து விட்டது. தமிழகம் முழுவதும் இந்த பந்த் அமைதியாக நடப்பதற்குமக்கள்தான் பெருமளவு உதவி புரிந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தில் சில இடங்களில் மட்டுமே வன்முறை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில்கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்திருந்தன. சில பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன என்றும் தகவல்கள்வந்துள்ளன.

போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் ஓடின என்றாலும், தமிழகம் முழுவதும் 145 பஸ்கள் அடித்துநொறுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபடுவதற்கு முயன்ற 4,000 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் டி.ஜி.பி. ரவீந்திரநாத்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+