உள்துறை அதிகாரிகள் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது முதல் நடந்த சம்பவங்கள் குறித்த இறுதி அறிக்கையை, மத்திய உள்துறைசிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையிலான நால்வர் குழு திங்கள்கிழமை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டதுகுறித்து உண்மையான தகவல்களை அறிவதற்காக உள்துறை சிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையிலான ஒரு குழுவை மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.
அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்து, அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முரசொலி மாறனைச் சந்தித்தது. பின்னர்வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலுவையும் சந்தித்தது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவே இக்குழு டெல்லி திரும்பிவிட்டது. அந்தக் குழு, உள்துறை செயலாளர் கமல் பாண்டேவிடம்ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பித்து விட்டது.
தற்போது துருக்கியில் உள்ள அத்வானியின் ஒப்புதல் கிடைத்த பின், இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இந்நிலையில், தமிழக நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை வாஜ்பாய் தலைமையில் டெல்லியில்கூடுகிறது என்பதும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைப் அமல்படுத்தலாம் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார் என்பதும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications