வாஜ்பாய் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
டெல்லி:
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை மாலை கூடும்அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்படுமா என்பது பற்றியும் இக்கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.
கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து,கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி அனுப்பிய அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்படி,ஆளுநர் அறிக்கை உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும், அவரைப் பதவி நீக்கம் செய்வது என்றும்மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, பாத்திமா பீவி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய திங்கள்கிழமை மாலை மத்தியஅமைச்சரவைக் கூட்டம் நடப்பதாக இருந்தது.
ஆனால், திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு பிரதமர் வாஜ்பாய் வீட்டில் நடக்கவிருந்த மத்திய அமைச்சரவைக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்றும்அறிவிக்கப்பட்டது.
வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அத்வானி செவ்வாய்க்கிழமை காலை டெல்லிதிரும்புகிறார். அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே திங்கள்கிழமைநடைபெற இருந்த கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது குறித்து மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் எம்.பி.கவுஷல்தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் குழு வாஜ்பாயிடம் கொடுத்துள்ள அறிக்கையும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக்கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட குழுவினரின் அறிக்கை பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், அரசியல் சட்டம் 356வது பிரிவைப்பயன்படுத்தி, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications