முக்கிய முடிவு எடுக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக அரசு மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சரவை பிரதமர் தலைமையில்செவ்வாய்க்கிழமை மாலை கூடியது.

நேற்றே நடந்திருக்க வேண்டிய இந்தக் கூட்டம் உள்துறை அமைச்சர் அத்வானி வெளிநாட்டில் இருந்ததால்ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என ஒரு பிரிவு அமைச்சர்களும் கலைக்கக் கூடாது என மற்றொரு தரப்புஅமைச்சர்களும் கூறி வருவதால் பிரதமர் முடிவு ஏதும் எடுக்காமல் கூட்டத்தை அத்வானி வரும் வரைஒத்திவைத்தார்.

ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டதால் ஜெயலலிதா தப்பிவிட்டதாகவே கருதப்படுகிறது.ஜெயலலிதா ஆட்சியைக் கலைப்பது தொடர்பான தீர்மானத்தை லோக்சபாவில் மட்டுமே பா.ஜ.க. அரசால்நிறைவேற்ற முடியும்.

ராஜ்யசபாவில் காங்கிரஸ் ஆதரவில்லாமல் இந்தத் தீர்மானம் நிறைவேறாது. எனவே, ஆட்சியைக் கலைத்துவிட்டுராஜ்யசபாவில் மத்திய அரசின் தீர்மானம் தோற்றால் அது வாஜ்பாய் அரசுக்கு பெரிய அரசியல் சட்ட சிக்கலைஏற்படுத்திவிடும்.

ஆளும் கூட்டணியில் தீர்மானம் ஒரு அவையில் தோற்றால், அது எதிர்க் கட்சிகளை ஊக்குவித்துவிடும். அவர்கள்நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவார்கள்.

இதனால் தான் காங்கிரஸ் ஆதரித்தால், ஜெயலலிதா அரசைக் கலைக்கத் தயார் என பா.ஜ.க. தேசியத் தலைவர்ஜனா. கிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார். இது வாஜ்பாயின் கருத்து என்று தான் கருதப்படுகிறது.

ஆனால், ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டது. ஜெயலலிதா ஆட்சியைகலைக்க ஆதரவு தர மாட்டோம் என காங்கிரஸ் தனது செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி மூலம்தெரிவித்துவிட்டது.

இதனால், மத்திய அரசு தனது கடுமையான நிலையைவிட்டு இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனது நெருக்குதலை அதிகமாக்கி மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியஇருவரையும் சிறையிலிருந்து மத்திய அரசு விடுவிக்க வைத்துவிட்டது. இதைச் செய்ய தமிழக அரசுதவறியிருந்தால் அரசியல் சட்டத்தின் 256, 257வது பிரிவுகளைப் பயன்படுத்தி அமைச்சர்களை விடுவிக்க மத்தியஅரசே நேரடி உத்தரவு பிறப்பித்திருக்கும்.

அந்த நிலை வந்துவிடும் முன் தமிழக அரசே பெரிய பல்டி அடித்து மத்திய அரசிடம் பணிந்துவிட்டது.அமைச்சர்களை விடுவித்தது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் ஒப்புக்கொண்டுவிட்டது.

மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி தன்னை சந்தித்த தமிழக சட்ட அமைச்சர் பொன்னையன், கல்வியமைச்சர்தம்பிதுரை ஆகியோரிடம் மிகக் கடுமையாகப் பேசியதாகத் தெரிகிறது.

முதலில் மாறன், பாலு மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டு வாருங்கள் என அவர் கூறியதாகத் தெரிகிறது.மேலும் மத்திய அரசின் மொத்த கோபத்தையும் ஜேட்லி இந்த இரு தமிழக அமைச்சர்களிடம் காட்டினார்.

அமைச்சர்களை விடுவித்தால் தான் தமிழக அரசுடன் மத்திய அரசு பேசும் எனவும் கூறிவிட்டார். இதையடுத்துத்தான் அவசர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு மாறனும் பாலுவும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்காவிட்டால், அரசியல் சட்டத்தின் 355வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைநமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என சில மத்திய அமைச்சர்கள் பிரதமரை வற்புறுத்திவருகின்றனர்.

இந்த அரசியல் சட்டப் பிரிவு அதிகமாக பயன்படுத்தப்பட்டதில்லை. இதைப் பயன்படுத்தினால் ஏற்படும்பிரச்சனைகள், வேறு வழி முறைகள் ஆகியவை குறித்து வாஜ்பாய் தலைமையிலான கூட்டம் விவாதித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+