தமிழக தற்காலிக ஆளுநராக ரங்கராஜன் இன்று பதவியேற்பு
ஹைதராபாத்:
ஆந்திர மாநில ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன் செவ்வாய்க்கிழமை தமிழக தற்காலிக கவர்னராகப்பொறுப்பேற்கிறார்.
தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை திரும்ப பதவி நீக்கம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்ததையடுத்து,தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனால் ஆந்திர மாநில ஆளுநர் டாக்டர் ரங்கராஜனை தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும்படியும் முடிவுசெய்யப்பட்டது.
இதற்கான நியமன உத்தரவு ஜனாதிபதி நாராயணனிடம் இருந்து டாக்டர் ரங்கராஜனுக்கு திங்கள்கிழமைவழங்கப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார் டாக்டர்ரங்கராஜன். பகல் 11 மணிக்கு தமிழக ஆளுநராக டாக்டர் ரங்கராஜன் பொறுப்பேற்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் இவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் ஏற்கனவே இரண்டு முறை தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications