கருணாநிதி உயிருடன் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை: மாறன் கவலை
சென்னை:
கருணாநிதி ஜாமீனில் வெளியே வர மாட்டேன் எனக் கூறிவிட்டார். அவரை ஜெயலலிதா அரசும் தொடர்ந்துகொடுமைப்படுத்திக் கொண்டு தான் இருக்கும். இதனால், அவர் சிறையிலிருந்து உயிருடன் திரும்பி வருவார் எனநான் நம்பவில்லை என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.
செவ்வாய்க்கிழமை போலீஸ் காவலில் இருந்து விடுதலையான மாறன் தான் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோமருத்துவமனையிலிருந்து புதன்கிழமை காலை டிஸ்சார்ஜ் ஆனார்.
அங்கிருந்து நேராக சென்னை மத்திய சிறைக்குச் சென்று தனது மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதியைசந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜாமீன் மனுவும்தாக்கல் செய்ய மாட்டேன் என்கிறார். சிறையிலேயே அவர் உயிர்போகும் வாய்ப்பும் உள்ளது.
அப்படி ஏதாவது நடந்தால் கருணாநிதிக்கு அதிமுக அரசு இறுதிச்சடங்கு நடத்துமா? இல்லை நாங்கள் நடத்தவேண்டுமா? ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் மாறன்.












Click it and Unblock the Notifications