மாறப் போகிறது வரலாறு
இந்திய வரலாற்றுக்கு முக்கியத்துவம்:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆங்கிலத்துறை ஆசிரியரும், பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும்உறுப்பினர்களில் ஒருவருமான ராஜேந்திர தீக்ஷித் கூறும்போது:
வரலாறு பாடத்திலிருந்து ஆரியர்கள் படையெடுப்புச் சம்பவங்கள் எடுக்கப்படவுள்ளது. தற்போதைய வரலாற்றுப்பாடத்தில் மொகலாய மன்னர்களைப் பற்றிய செய்திகள் பக்கம் பக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அசோக மன்னர், சாணக்கிய மன்னர் ஆகியவர்களைப் பற்றி மிகக் மிகக் குறைவாகவேகொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இந்தியாவில் நடந்த சம்பவங்களுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் கொடுக்கப்படவேண்டும்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஹியான், யுவான் சுவாங் ஆகியோர் பற்றியும் விரிவாகக் கொடுக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் ராஜேந்திர தீக்ஷித்.
இந்த மாற்றத்துக்கு சில வரலாற்று நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் அர்ஜூன் தேவ் கூறும் போது:
வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்களை அழிக்க நினைக்கக் கூடாது. வரலாற்று முக்கியத்துவம்பெற்ற பல சம்பவங்கள் நம் இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமாகின்றது.
வரலாற்றுப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நினைப்பவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வரலாறுஎன்பது பழைய சம்பவங்களின் தொகுப்பாகும். இதை முற்றிலுமாக அழிக்க நினைக்கக் கூடாது என்றார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆதித்யா முகர்ஜி கூறுகையில், ஒரு பாடத்திட்டத்தைமாற்றியமைக்கும்போது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலர் உறுப்பினர்கள் அனைத்து மாநிலகல்வித்துறையையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications