மாறப் போகிறது வரலாறு
இந்த வருடம் முதல் பள்ளிப் பாடங்களில் வரலாறு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பள்ளி கல்வி இயக்கம்ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள வரலாறு பாடத்தில் ஆரிய மன்னர்கள் படையெடுப்பு பற்றி எந்தத் தகவல்களும்இடம் பெறாது. அதற்குப் பதிலாக இந்தியத் தலைவர்கள் குறித்த விஷயங்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டிருக்கும்.
இதுகுறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் ஜக்மோகன் சிங் ராஜ்புட் கூறியதாவது:
பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை வரலாறு தனிப்பாடமாக இருந்தது வந்தது. இந்த வருடம் முதல் 10 ம் வகுப்பு வரைவரலாறு பாடத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள்சமூக அறிவியல் பாடத்துடன் இணைக்கப்படும்.
இப்போது உள்ள வரலாற்றுப் பாடம் மார்க்சிய சிந்தனைகளால் எழுதப்பட்டது. இதை மாற்றி (இந்துத்துவகொள்கை அடிப்படையில் எழுதி) மாணவர்களுக்கு வழங்குவோம்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள வரலாறு பாடத்திட்டத்தில் கடந்த 15 வருடங்களில் நடந்த வரலாற்றுநிகழ்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும். நமது வரலாற்றுப் பாடத்திட்டங்கள் இதுவரை கற்பனை அடிப்படையில்தொகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மாற்றியமைக்கப்படவுள்ள வரலாற்றுப் பாடத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் இருக்கும். பழைய வரலாற்று முறையிலிருந்து முற்றிலும் இது வேறுபட்டிருக்கும்.தேவையில்லாத உதாரணங்களைக் கொடுத்து பள்ளி மாணவர்களைக் குழப்பும் வகையில் தற்போதைய வரலாற்றுப்பாடம் இருக்காது.
மாணவர்களின் படிப்புச்சுமையைக் குறைக்கும் வகையிலும் வரலாற்றுப் பாடம் இருக்கும். புதிய வகைப்பாடத்திட்டத்தில் புவியியல், பொருளாதாரம், சமூக அறிவியல் ஆகியவை சம அளவில் கொடுக்கப்பட்டிருக்கும்.
1947 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் கோர்வையாகத்தான் வரலாற்றுப் பாடங்கள்தொகுக்கப்படும்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவம்:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், அங்கு ராமர் கோவில்கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் முயன்று வரும் விஷயம் ஆகியவை வரலாற்றுப் பாடத்தில் இடம்பெறும்.
இருப்பினும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை விரிவாகக் கொடுத்து வீண் சர்ச்சையை ஏற்படுத்தவிரும்பவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், ராமர் கோவில் கட்ட நடக்கும் ஏற்பாடுகள் ஆகியவை குறித்து நடுநிலையானபாடத்தைக் கொடுத்து எது சரியென்று பள்ளி மாணவர்களையே தேர்வு செய்ய வைக்கவுள்ளோம்.
புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான விளக்கங்கள் எதுவுமே இடம்பெறாதுஎன்றார் ஜக்மோகன் சிங்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications