போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தம்பிதுரை
டெல்லி:
கருணாநிதி, மாறன், பாலுவைக் கைது செய்த போலீஸ் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாதுஎன தமிழக கல்வியமைச்சர் தம்பிதுரை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, போலீஸார் அராஜகமான செயலில் ஈடுபட்டதையும்,மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோரைப் போலீஸார் கைது செய்ததையும்கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, தமிழகப் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுதமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், போலீஸார் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தம்பிதுரை உறுதியாகக்கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
தமிழகப் போலீஸார் தன்னுடைய கடமையைத்தான் செய்துள்ளனர். அப்போது அங்கு மத்திய அமைச்சர் மாறன்வந்த பிறகுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. போலீஸார் தங்களுடைய கடமையைச் செய்யவிடாமல் அவர்தான்தடுத்துள்ளார்.
சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியை மாறன்தான் கடுமையாகத் தாக்கியுள்ளார். சன் டி.வி. தவிர மற்ற அனைத்துடி.வி.க்களிலும் காட்டப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும்.
இந்நிலையில் நாங்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. மத்திய அரசின்வற்புறுத்தலுக்கு இணங்கி, நாங்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால், அது போலீஸாரின் மன உறுதியைக்குலைக்கும் வகையில் அமைந்துவிடும்.
இதையும் மீறி போலீஸாரின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்றார்தம்பிதுரை.
அரசியல் சட்டம் 355 பாய்வதற்கான அறிகுறி?
அமைச்சர் தம்பிதுரையின் இந்த அறிக்கை, அரசியல் சட்டம் 355வது பிரிவு தமிழகத்தில் பாயப் போவதற்கானஅறிகுறியாகவே தோன்றுகிறது. போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினால், நிச்சயம் அதைத்தமிழக அரசு மறுக்கும் என்பதை நன்கு அறிந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
அது போலவே, தற்போது தமிழக அமைச்சர் தம்பிதுரை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றுஉறுதியாகக் கூறியுள்ளார். எனவே, நிச்சயம் தமிழக அரசின் மீது அரசியல் சட்டத்தின் 355வது பிரிவு பாயும் என்றுதெரிகிறது.
ஆனால், தனது அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க கருணாநிதியை விடுவித்துவிடஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications