முன்னாள் அமைச்சர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திருச்சிசிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் சற்குண பாண்டியன் உள்பட 204 பெண்கள்உண்ணாவிரதம் இருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து, அடித்து இழுத்துச் சென்றதையடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தென் மாவட்டங்களில் போராட்டம் நடத்திய திமுக மகளிர் அணியினரைப் போலீஸார் கைது செய்து திருச்சிசிறையில் அடைத்தனர். திமுக முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதியை விடுதலை செய்யக்கோரி சற்குண பாண்டியன் உள்பட மகளிர் அணி திமுகவினர் அனைவரும்செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.












Click it and Unblock the Notifications