மனிதாபிமான முறையில் கருணாநிதியை விடுவிக்கிறோம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தான் அவரை மனிதாபிமான முறையில் விடுவிப்பதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது.
ஆனால், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே கருணாநிதியை விடுவிக்க ஜெயலலிதா இறங்கி வந்ததாகத்தெரிகிறது. கருணாநிதி மீதான நெருக்குதலைக் குறைக்காவிட்டால், அரசியல் சட்டத்தின் 355வது பிரிவு பாயும்என மத்திய அரசு மறைமுகமாக ஜெயலலிதாவை எச்சரித்தது.
அதன் முதல்கட்டமாகத் தான் மாநில அரசுக்கு தவறுகளைத் திருத்திக் கொள்ளச் சொல்லி எச்சரிக்கை அனுப்பியது.355வது பிரிவை பயன்படுத்த வேண்டுமானால் முதலில் இது போன்ற எச்சரிக்கையை அனுப்ப வேண்டும். அதைத்தான் மத்திய அரசு செய்தது.
மத்திய அரசிடமிருந்து அதிரடித் தாக்குதல் வருவதற்கு முன்னதாகவே ஜெயலலிதா தனது நிலையிலிருந்து இறங்கிவந்துவிட்டார்.
இது தவிர அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகளின் தலைவர்களான மூப்பனார், நல்லகண்ணு, சங்கரய்யா ஆகியோர் கருணாநிதியை புதன்கிழமைசிறையில் சந்தித்தனர்.
பின்னர் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கூட்டறிக்கையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும்கருணாநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறினர்.
மேலும், கருணாநிதியை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதால் தனது அரசுக்கு எதிராகத் தான் மக்கள் கருத்துதிரும்பி வருகிறது என்பதையும் உணர்ந்த ஜெயலலிதா மேலும் பெயர் கெட்டுவிடாமல் இருப்பதற்காக அவரைஉடனடியாக விடுவிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்கெல்லாம் உச்சாணியாக கருணாநிதி சிறையில் உயிர் நீத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என முரசொலிமாறன் பேசியது ஜெயலலிதாவை உலுக்கிவிட்டது. அப்படி ஏதாவது நடந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்வதுசாத்தியமேயில்லை என உணர்ந்த ஜெயலலிதா அவரை உடனடியாக வெளியில் விட்டுவிட முடிவு செய்தார்.
இதையடுத்து தலைமைச் செயலாளர் சங்கர், காவல்துறை டி.ஜி.பி. ரவீந்திரநாத் உள்பட மூத்த அதிகாரிகளுடன்ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கருணாநிதியை மனிதாபிமான முறையில் விடுதலைசெய்யவும், அவர் வெளியில் இருந்தாலும் அவர் மீதான ஊழல் வழக்குகளுக்கு அவரால் இடைஞ்சல் வராது எனக்கருதுவதாலும் உடனடியாக விடுதலை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
உடனடியாக இது தொடர்பான உத்தரவுகளும் தலைமைச் செயலகத்திலிருந்து பறந்தன.
இதனால், இன்று (புதன்கிழமை) மாலைக்குள் கருணாநிதி விடுவிக்கப்பட்டு விடுவார்.












Click it and Unblock the Notifications