பணிகிறது ஜெ. அரசு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் பிறந்த வீட்டை பார்க்க விருப்பம்:

Musharrafடெல்லியில் இருக்கும்போது தான் பிறந்த வீட்டை பார்க்கவும் பர்வேஸ் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டுக்கு மனைவி ஷெபாவுடன் பர்வேஸ் செல்வார்.குச்சா சதாவுல்லா கான் தெருவில் உள்ள இந்த வீடு இப்போது இடிந்துபோய் காணப்படுகிறது. நெகர்வாலி ஹவேலிஎன்ற இந்த வீடு தான் பர்வேஸ் பிறந்த இடமாகும். சுதந்திரத்துக்கு முன் வரை இவரது குடும்பம் இங்கு தான்வசித்தது.

பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது.

இப்போது இந்த வீட்டில் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியா வந்த 2 இந்துக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களும் நாட்டுப் பிரிவினையின்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து டெல்லிக்கு குடியேறிவர்கள்தான்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது ஏற்பட்ட மதக் கலவரத்தின்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த பலகுடும்பங்கள் இந்த வீட்டில் தான் தஞ்சம் புகுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சியாசின் போர் ஓயுமா?:

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் நடந்து சண்டை நடக்கும் பகுதி சியாச்சின் தான். இமயமலையின் உச்சியில் இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்துஇங்கு படைகளை நிறுத்தி வைத்துள்ளன.

இங்கு எதிரியின் துப்பாக்கிக் குண்டால் இறக்கும் வீரர்களைவிட இயற்கையின் சீற்றத்தாலும், கடும் குளிரினாலும் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

தரைமட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில் 76 கி.மீ. தூரத்துக்கு வெறும் பனிக்கட்டிகளும், கடும் குளிரும் வீசும் இடம் தான் சியாச்சின். இங்கிருந்துபடைகளை வாபஸ் பெற்றுக் கொள்ள இரு நாடுகளும் 1986ம் ஆண்டு முதல் பேசி வருகின்றன. ஆனால், வெற்றி தான் கிடைக்கவில்லை. 1984ம்ஆண்டிலிருந்து இரு நாடுகளும் இங்கு படைகளை நிறுத்தி வைத்துள்ளன.

வாஜ்பாய்-பர்வேஸ் பேச்சு நடத்தப் போகிறார்கள் என்ற உடனேயே சியாசினிருந்து இரு தரப்பினரும் படைகளை வாபஸ் வாங்குவது குறித்து பேசுவார்கள்எனக் கருதப்பட்டது. ஆனால், இது சாத்தியமில்லை என பாகிஸ்தான் கூறிவிட்டது.

இங்கிருந்து படைகளை வாபஸ் பெற இந்திய ராணுவமும் தயாராக இல்லை. இந்தியப் படைகளை வாபஸ் பெற்று இங்கு பாகிஸ்தான் ஆக்கிரமித்துவிட்டால்,அவர்களை அப்புறம் விரட்டி அடிக்கவே வாய்ப்பில்லாமல் போய்விடும் என இந்தியா கருதுகிறது.

அதே போல சியாச்சினிலிருந்து சீனாவையும் இந்தியாவால் கண்காணிக்க முடியும். சீந ராணுவத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் நமது படைகளை நாம்சியாச்சினில் வைத்திருக்கத் தான் வேண்டும் என்கிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள்.

கடந்த 16 ஆண்டுகளில் சியாச்சினில் கிட்டத்தட்ட 500 இந்திய வீரர்களை நாம் இழந்திருக்கிறோம்.

ஆபரேஷன் மேக்தூத் என்ற பெயரில் இந்திய ராணுவம் சியாச்சினில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கார்கில் போரை நடத்திய பர்வேஸ்:

இப்போது பேச்சுவார்த்தைக்கு வரும் பர்வேஸ் தான் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தினரையும் ஆப்கான் மதவாத தீவிரவாதிகளையும் அனுப்பி இந்தியப்பகுதிகளை ஆக்கிரமிக்கச் செய்தவர்.

இந்தியா மாபெரும் தாக்குதல் நடத்தித் தான் அவர்களை விரட்டியது. அந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 520 பேர் உயிரிழந்ததை நாம் என்றும்மறக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+