அப்பல்லோவில் கருணாநிதி அனுமதி
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 29 ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கருணாநிதி 5 நாட்களுக்குப்பிறகுபுதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட கருணாநிதி கழுத்து வலியாலும், கை, கால் வலியாலும் அவதிப்பட்டு வருவதால் அவர் உடனடியாகஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு பல மருத்துவப் பரிசோதனைகள் செய்யவிருப்பதாகஅவரது குடும்ப டாக்டர் கோபால் தெரிவித்தார்.
கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோர் அருகிலிருந்து கவனித்து வருகின்றனர்.
அன்பழகன் பார்த்தார்:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை திமுக பொதுச்செயலாளர் அன்பழன்மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதிக்கு அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனைகளும்செய்யப்படவுள்ளது.
அவர் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வீடு திரும்புவார் என்றார்.
ஏராளமான திமுக பிரமுகர்களும், திமுக முன்னாள் அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின்உடல்நிலை குறித்துத் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications