மத்திய அரசு நோட்டீஸ்: உயர் அதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை
சென்னை:
ஒரு வார காலமாக தலைமை செயலகத்துக்கு வராமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தலைமை செயலகத்துக்குவந்து மத்திய அரசின் எச்சரிக்கை பற்றி தமிழக தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பதவி ஏற்புவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் அதற்குப்பிறகுஅங்கு வரவில்லை.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுக்கு பின் ஜெயலலிதா தலைமை செயலகத்துக்கு வரவில்லை. அதன் பின்குருவாயூருக்கு சென்றுவிட்டு வந்த பின் புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா அப்போதும் தலைமைசெயலகத்துக்கு வரவில்லை.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை முதல்வர் தலைமை செயலகத்துக்குவந்தார். வந்த உடன் தமிழக தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசினார்.
இந்த கூட்டத்தில், மத்திய அரசு அனுப்பி இருக்கும் எச்சரிக்கை நோட்டீசை எவ்வாறு அணுகுவது என்பது குறித்துவிவாதிக்கப்பட்டது.
போலீஸார் இடமாற்றம்:
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்துபிரச்சனையை முடித்துக் கொள்ளலாமா? என்று ஆலோசனை செய்யப்பட்டது.
போலீசார் செயலை நியாயப்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் காரணமாக, வியாழக்கிழமை காலை நடைபெறுவதாக இருந்த பல துறைகளின் ஆய்வுக்கூட்டங்களும் பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மதிய உணவிற்காக ஜெயலலிதா வீட்டிற்கு சென்று விட்டு வந்த பின் ஒவ்வொரு துறையினருடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
ஜெயலலிதா உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த விதமான முடிவு எடுக்கப்பட்டது எனதெரியவில்லை.
முன்னதாக ஜெயலலிதா முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை வழியனுப்பி வைக்க விமானநிலையம் சென்ற போதேஅவரிடம் மத்திய அரசு நோட்டீஸ் குறித்து தமிழகம் எந்த விதமான நடவடிக்கை எடுக்க உள்ளது என பத்திரிக்கையாளர்கள்அறிய முயன்றனர். ஆனால் முதல்வர் பத்திரிக்கையாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.
கோட்டைக்கு வந்த முதல்வர், ஆலோசனை கூட்டத்திற்கு பின் மதிய உணவுக்கு வீட்டிற்கு கிளம்பும் முன், மத்திய அரசின்நோட்டீஸ் பற்றி முதல்வர் கருத்தை கேட்பதற்காக காத்திருந்த நிருபர்கள் முதல்வரிடம் கேள்வி கேட்க முயன்றனர்.
பத்திரிக்கையாளர்கள் பக்கமே திரும்பாமல் சென்ற முதல்வர், நிருபர்கள் பக்கம் வந்து, பத்திரிக்கைகளுக்கு நான் சொல்வதற்குஒன்றும் இல்லை என கூறிவிட்டு சென்றார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications