மத்திய அரசு சொன்னதால் தான் மாறன் விடுதலை: பொன்னையன்
சென்னை:
மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தான் மத்திய அமைச்சர்கள் மாறனையும், பாலுவையும் விடுவித்தோம் எனதமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
முன்னதாக மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவோ, பிரதமர் அல்லது அத்வானியின் வலியுறுத்தல்காரணமாகவோ தாங்கள் விடுவிக்கப்படவில்லை என மாறன் கூறியிருந்தார்.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடுமோ என பயந்து தான் தங்களை ஜெயலலிதா அரசு விடுவித்ததாக மாறன்கூறியிருந்தார்.
பொன்னையன் பேட்டி:
ஆனால், மாநில சட்டத்துறை அமைச்சர் பொன்னையன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தான் மாறனையும், பாலுவையும் விடுவித்தோம். காவல்துறையினர் மாறனைத்தாக்கவேயில்லை. அவர் தான் போலீசாரைத் தாக்கினார். இதில் மாறன் தவறான தகவல்களைத் தெரிவித்துவருகிறார்.
அவரைத் தாக்கியதில் அவர் இறந்து போய்விட்டதாக கருதிய போலீஸ் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டதாக மாறன்கூறியிருக்கிறார். இது பொய்யான செய்தியாகும்.
ராஜிவ் காந்தியைக் கொன்ற சிவராஜன், தணு ஆகியோருடன் ஜெயலலிதா இருப்பது போன்ற போலியான படத்தைவெளியிட்டவர் தான் இந்த மாறன் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார் பொன்னையன்.
தம்பிதுரை:
முன்னதாக கல்வியமைச்சர் தம்பிதுரை கூறுகையில், கருணாநிதி கைது செய்யபட்டதால் தமிழக அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.
வாஜ்பாயையும் மத்திய அமைச்சர்களையும் நாங்கள் சந்தித்து உண்மை நிலையை விளக்கினோம். அவர்களும்எங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவம் குறித்து காவல்துறை எடுத்த வீடியோவை பிரதமரிடம்கொடுத்துள்ளோம் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications