அடுத்து வருகிறது புண்ணாக்கு ஊழல்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பலரைக் கைது செய்த தமிழக அரசு, அடுத்ததாகபுண்ணாக்கு ஊழல் சம்பந்தப்பட்ட கோப்புகளை லேசாகத் தூசி தட்டி எடுத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மதிய உணவுடன் குழந்தைகளுக்குத் தரப்பட்ட சத்துருண்டைகளில், சத்துள்ளமாவுகளைக் கலந்து தராமல், மாடுகளுக்குப் போடக்கூடிய புண்ணாக்கைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள் என்றுசென்ற மாதத் துவக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.
இந்த விஷயத்தில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது என்று கூறி, இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் அவர்உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, எப்படியாவது விரைவில் கருணாநிதியைக் கைது செய்து "உள்ளே" தள்ள வேண்டும் என்றகுறிக்கோளுடன், மேம்பால வழக்கில் அவரைக் கைது செய்து "உள்ளே" தள்ளிய ஜெயலலிதா, நன்றாகவே தன்கையில் சூடு போட்டுக் கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரியும்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் குறித்து, மத்திய அரசு உள்பட உலகமே எதிர்த்து, கண்டனக் கனைகளைஜெயலலிதா அரசின் மேல் தொடுத்தன. தமிழக அரசே கலைந்து போகக் கூடிய அளவுக்குக் கூட இந்த விவகாரம்கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும், பலத்த எச்சரிக்கையுடன் தமிழக அரசைத் தற்போது மன்னித்துவிட்டிருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசு மற்றும் தற்போதைய தமிழக ஆளுநர் ரங்கராஜனின் வற்புறுத்தலுக்கு இணங்க, இந்தச் சம்பவம்குறித்து, தற்போது நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேம்பால ஊழல் வழக்கும் நீதிமன்றத்தில் தற்போது சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. வழக்கை விசாரித்துவரும் நீதிபதி அசோக்குமார் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார் அரசுவழக்கறிஞர் கோமதிநாயகம்.
இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் போதுமானதாக இல்லை. போதிய ஆதாரங்களும் இல்லாமல் கருணாநிதிஉள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புண்ணாக்கு ஊழல் சம்பந்தப்பட்ட பைலைத் தைரியமாகவே கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா.ஆனால், இந்த முறை அவர் கொஞ்சம் கூட சறுக்கிவிடக் கூடாது என்பதில் அதிகவனமாக இருந்து வருகிறார்.
அனைத்து ஆவணங்களும் மிகச் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பலமுறை ஆய்வு செய்த பிறகுதான் கைதுநடவடிக்கைகளில் அவர் இறங்குவார் என்று கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் நெய்ல்வால் என்பரிடம்தான், இந்த புண்ணாக்கு ஊழலை விசாரிக்கும் பொறுப்புஅளிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications