சென்னை விமானம் விபத்திலிருந்து தப்பியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் இருந்து சென்னைக்குக் கிளம்பிய விமானம், விமானியின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்திலிருந்துதப்பியது. பயணிகள் அனைவரும் அவசர வழி மூலம் இறக்கி விடப்பட்டனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 ரக விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்குடெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பியது.

ரன்வேயில் விமானம் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, விமானியின் அறை மற்றும் கேபினுக்குள் புகைவந்து கொண்டிருப்பதை விமானி கவனித்தார். இதனால், விமானத்தை உடனடியாக நிறுத்துவதற்கான பாரசூட்டைவிரியச் செய்தார் விமானி. உடனே, விமானத்தின் வேகம் குறைந்து, ரன்வேயிலேயே விமானம் நின்றுவிட்டது.

காற்றடைத்த சறுக்கு படிக்கட்டுகள் உடனடியாக இறக்கப்பட, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக அதன்வழியாகக் கீழே இறங்கினர். பின்னர் அவர்களுக்கு விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. சிற்றுண்டியும்வழங்கப்பட்டது.

விமானத்தின் ஏர்கண்டிஷன் குழாய் வழியாக விமானியின் அறை மற்றும் கேபினுக்குள வெள்ளை நிற வாயுவெளிப்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் அப்போது, ஒரு குழந்தை உள்பட 63 பயணிகள் இருந்தனர். மும்பையிலிருந்து வந்த வேறொருஜெட் ஏர்வேஸ் விமானம், சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. அதில் 57 பயணிகள் மட்டும் கிளம்பிச் சென்றனர்.பிற பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+