பெங்களூர்: இன்டர்நெட்டில் மின் கட்டணம் செலுத்தலாம்
பெங்களூர்:
பெங்களூர் நகர மக்கள் அடுத்த மாதத்திலிருந்து, மின் கட்டணத்தைக் கட்ட நீண்ட வரிசையில் காத்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை. இன்டர்நெட் மூலம் மின் கட்டணம் கட்ட தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சராசரியாக குறைந்தது 20 நிமிடமாவது வரிசையில் நிற்கவேண்டியதிருக்கும். ஆனால், அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டம் மூலம் மக்கள் இனிவரிசையில் நிற்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர்களது நேரமும் வீணாகாது.
ஐசிஐசிஐ வங்கியும், கர்நாடக மின்சார கார்பரேஷன் லிமிடெட்டும் (கே.பி.டி.சி.எல்.) செய்து கொண்டுள்ளஒப்பந்தத்தின்படி, கம்ப்யூட்டர் மவுசைத் தட்டி மின் கட்டணத்தை கட்டிவிட முடியும்.
இதற்காக நாம் கிரெடிட் கார்டெல்லாம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அவர் தனது கிரெடிட்கார்டு ரகசியங்கள் பாதுகாக்கப்படுமா என்று அஞ்சவும் தேவையில்லை.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். இன்டர்நெட் மூலம் மின் கட்டணத்தை செலுத்த விரும்புவதாககே.பி.டி.சி.எல்லிடம் நாம் தெரிவிக்க வேண்டும்.
உடனே, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கோ அல்லது அதன் துணை நிறுவனமான மின் கட்டணத்தை வசூல் செய்யும்மையத்திற்கோ வாடிக்கையாளரின் விருப்பம் குறித்து கே.பி.டி.சி.எல். தெரிவிக்கும். அதன் பின் நாம் செலுத்தவேண்டிய மின் கட்டணத் தொகை குறித்த விவரங்களையும் அவர்களுக்கு அனுப்பி வைக்கும்.
ஒவ்வொருக்கும் ஒரு பாஸ்வேர்ட் வழங்கப்படும். இதை உபயோகப்படுத்தி நாம் கட்ட வேண்டிய தொகையைஇன்டர்நெட்டிலேயே அறிந்து கொள்ளலாம்.
நம் வங்கிக் கணக்கிலிருந்து மின் கட்டணத்திற்கான தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பெற்றுக் கொள்ள அனுமதிஅளிக்க வேண்டியது முக்கியம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் கூட, இந்த வசதியைப் பயன்படுத்தமுடியும். இதற்காக ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.
வசூலிக்கும் பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2 நாட்களுக்குள் கே.பி.டி.சி.எல்க்கு செலுத்திவிடும். பணம் செலுத்தியதுதொடர்பான ஆவணங்களையும் 1 வருடகாலம் வரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பாதுகாப்பாக வைத்திருக்கும்.
இது குறித்து கே.பி.டி.சி.எல். தலைவர் வி.பி. பாலிகர் கூறும்போது:
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, வங்கிக் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் இந்தத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது வேலைக்கு செல்லும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
குறித்த காலத்தில் மின் கட்டணம் கட்டப்படாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்வாரியஅதிகாரிகள் பயமுறுத்துவார்கள். இதன் காரணமாக பல சமயம் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதும் உண்டு.
தற்போது அறிமுகப்படுத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம், இந்நிலைமை முற்றிலும் தவிர்க்கப்படும்.மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய பணம் ஏதாவது பாக்கி இருந்தால் அது கீழ்மட்ட நிலையில் இருக்கும்போதேகண்டுபிடித்து விடலாம். ஆனால், இன்டர்நெட் மூலம் மின் கட்டணம் செலுத்துபவர்கள் தனது வங்கிக் கணக்கில்தேவையான அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் என்றார் அவர்.
இன்டர்நெட் மூலம் பணம் கட்டும் முறை, விரைவில் கிராமப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட இருக்கிறது.எந்தெந்த கிராமங்களில் எல்லாம் கம்ப்யூட்டர் மூலம் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அங்கெல்லாம்இன்டர்நெட் மூலம் மின்சார கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படும்.
கர்நாடகத்தில் உள்ள பெல்காம், ஹுப்ளி, மைசூர் மற்றும் மங்களூர் போன்ற பெரு நகரங்களும் இந்த திட்டத்தைவிரைவில் கடைப்பிடிக்க உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications