போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம்---- கருணாநிதி
சென்னை:
என்னைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் தமிழகமுதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறினார்.
தான் கைது செய்யப்பட்ட போது, போலீஸார் நடத்திய "தள்ளுமுள்ளு" காரணமாக, கை, கால், தோள்பட்டைகளில்வலி ஏற்பட்டுள்ளதாகக் கருணாநிதி கூறியதை அடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு பிசியோதெரப்பி உள்ளிட்ட பல மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் தற்போது நல்லஉடல்நிலையுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை கருணாநிதி மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.அப்போலோ மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் காருக்குக் கொண்டு வரப்பட்ட கருணாநிதி வீடு கிளம்புவதற்குமுன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னையும் மத்திய அமைச்சர்களையும் தாக்கிய போலீஸார் மீது, இதுவரை எந்த நடவடிக்கையையும் தமிழகஅரசு எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் போராடுவோம்.
போராட்டம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை, திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதிமுககூட்டணியிலிருந்து விலகி வந்துள்ள பாமகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதுபற்றியும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம்.
இது குறித்து பிரதமர் வாஜ்பாயுடனும் ஆலோசனை நடத்துவோம் என்றார் கருணாநிதி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications